Asianet News TamilAsianet News Tamil

Bengaluru airport: 10 நாட்கள் மூடப்படும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம்!

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் விமானக் கண்காட்சிக்காக பத்து நாட்கள் பகுதி நேரமாக இயங்க உள்ளது.

Bengaluru airport to shut partially on these 10 days in February
Author
First Published Feb 9, 2023, 3:31 PM IST

ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு பெங்களூரு விமான நிலையிம் பத்து நாட்களுக்கு பகுதி நேரமாக செயல்பட உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 5 நாட்கள் ஏரோ இந்தியா 2023 என்ற விமானக் கண்காட்சி நடைபெற உள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பெங்களூரு எலகங்கா விமான நிலையத்தில் இந்தக் கண்காட்சி நடக்கும்.

இதனை முன்னிட்டு எலகங்கா விமான நிலையத்தில் விமான கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இதனிடையே விமானக் கண்காட்சியின்போது சாகசத்தில் ஈடுபடும் விமானங்கள் அணிவகுத்து நிற்கவும், பயிற்சியில் ஈடுபடவும் வசதியாக, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலும் விமானங்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ISRO 2023: இஸ்ரோவின் SSLV-D2 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது: வெற்றியாகுமா?

பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை என மொத்தம் 10 நாட்களுக்கு வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேதி வாரியாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமானம் மூடப்படும் நேரம்:

பிப்ரவரி 8 - 11: காலை 9 மணி - நண்பகல் 12 மணி; பிற்பகல் 2 மணி – மாலை 5 மணி

பிப்ரவரி 12: காலை 9 மணி - நண்பகல் 12 மணி

பிப்ரவரி 13: காலை 9 மணி - நண்பகல் 12 மணி

பிப்ரவரி 14-15: நண்பகல் 12 மணி – பிற்பகல் 2.30 மணி

பிப்ரவரி 16-17: காலை 9.30 மணி –  நண்பகல் 12 மணி; பிற்பகல் 2 மணி – மாலை 5 மணி

இந்த நேரங்களில் விமானப் பயணத்திற்கு பதிவு செய்திருப்பவர்கள் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.

Indians in Turkey: துருக்கி நிலநடுக்கத்தில் மாட்டிக்கொண்ட இந்தியர்கள் நிலை என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios