Asianet News TamilAsianet News Tamil

Himachal Election 2022: இமாச்சல் தேர்தலுக்கு முன்பாக கூட்டமாக பாஜகவில் சேர்ந்த 26 காங்கிரஸ் நிர்வாகிகள்

இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 26 நிர்வாகிகள், பாஜகவில் நேற்று இணைந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Before the Himachal Pradesh elections, 26 Congress leaders have joined the BJP.
Author
First Published Nov 8, 2022, 10:44 AM IST

இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 26 நிர்வாகிகள், பாஜகவில் நேற்று இணைந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு வரும் 12ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. பாஜக, மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியைத் தக்கவைக்க பாஜக கடுமையாக போராடி, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை முடக்குங்கள்: நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 26 முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் நேற்று இணைந்தனர்.

இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 4 நாட்களே இருக்கும் நிலையில் 26 முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவாக இருக்கும்.

முடி கொட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்த இளைஞர்.. மருத்துவர் தான் காரணம் - அதிர்ச்சி தகவல்!

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தர்மபால் தாக்கூர் கந்த், முன்னாள் செயலாளர் ஆகாஷ் சைனி, முன்னாள் கவுன்சிலர் ரஞ்சன் தாக்கூர், முன்னாள் மாவட்ட தலைவர் அமித் மேத்தா, மேர் சிங் கான்வார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் நெகி, ஜெய் மா சக்தி சமூக சனஸ்தான் தலைவர் ஜோகிந்தர் தாக்கூர், நரேஷ் வர்மா, சாம்யானா வார் உறுப்பினர் யோகேந்திர சிங், டாக்ஸி யூனியன் உறுப்பினர் ராகேஷ்சவுகான், இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளைத் தலைவர் தர்மேந்திர குமார், வீரேந்திர ஷர்மா, ராகுல் ராவத், சோனு ஷர்மா, அருண் குமார், ஷிவம் குமார், கோபால் தாக்கூர் ஆகியோர் பாஜகவில் நேற்று இணைந்தனர்.

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வரவேற்றுள்ளார். பாஜகவுக்கு வரும் அனைவரும் பாஜக இன்முகத்துடன் வரவேற்கும், அனைவரும் ஒன்றாக இணைந்து பாஜகவின் வெற்றிக்காக உழைப்போம் என்று முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு காரணமே காங்கிரஸ் தான்.. காங்கிரஸ் கட்சி வரவேற்பு !

இமாச்சலப்பிரதேசத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும், மாநில மக்கள் பிரதமர் மோடி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தது, அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவைத் தேர்தலில் ஏற்படுத்தும். இமாச்சலப்பிரதேசத்தில்வரும் 12ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது

Follow Us:
Download App:
  • android
  • ios