காதலுக்காக தந்தையை மாடியிலிருந்து தள்ளி விட்ட மகள்....!

உத்திர்பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் விஷ்ணு என்பவருக்கு ஒரு மகள் இருந்துள்ளார்.மனைவி மகளோடு நிம்மதியாக வாழ்க்கை சென்று  கொண்டிருந்த விஷ்ணு,தன் மகளாலே மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரவு நல்ல உறக்கத்தில் இருந்து போது,விடியற்காலை நான்கு மணி  அளவில்,சப்தம் கேட்டு உள்ளது.இந்த சப்தத்தால் விழித்துக்கொண்ட தந்தை விஷ்ணு, மகள் ரூமிற்கு சென்று உள்ளார்.

அங்கு அவருடைய மகள்,தன்னுடைய காதலனுடன் இருந்ததை பார்த்து  அதிர்ச்சி அடைந்த தந்தை மகளை கண்டித்து உள்ளார்.

ஒரு கட்டத்தில்,மகளின் காதலனுக்கும் தந்தை விஷ்ணுக்கும் சண்டை  முற்ற,கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.

அப்போது,மகளும் அவருடைய காதலனும் ஒன்றாக சேர்ந்து தந்தையை 3 ஆவது மாடியிலிருந்து தள்ளி விட்டதாக தெரிகிறது.பின்னர் ரத்த வெள்ளத்தில் மிதந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  இறந்துள்ளார்.

இது குறித்து மகள் மற்றும் மகளின் காதலன் மீது புகார் கொடுத்துள்ளார்   விஷ்ணுவின் மனைவி.

மகள் விசாரணை வளையத்திற்குள் உள்ள நிலையில்,காதலன் மட்டும் தப்பித்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் தப்பி ஓடிய  காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.