'தொழில்நுட்பத்தில் எச்சரிக்கை தேவை': ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் ஃபைனலில் குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை..

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் கிராண்ட் பைனலில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம்  உரையாடினார். 

Be cautious of tech Pm Modi warns about Deepfakes at Smart India Hackathon Filnale Rya

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் கிராண்ட் பைனலில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம்  உரையாடினார். 

Smart India Hackathon (SIH) என்பது, அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகள், தொழில்கள் மற்றும் பிற நிறுவனங்களின் அழுத்தமான பிரச்சனைகளைத் தீர்க்க மாணவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்கான ஒரு நாடு தழுவிய முயற்சியாகும். 2017 இல் தொடங்கப்பட்ட SIH இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. கடந்த ஐந்து பதிப்புகளில், பல புதுமையான தீர்வுகள் பல களங்களில் காணப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்த ஆண்டு ஹேக்கத்தானில், 44,000 குழுக்களிடமிருந்து 50,000 க்கும் மேற்பட்ட யோசனைகள் பெறப்பட்டன - SIH இன் முதல் பதிப்பைக் காட்டிலும் கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஸ்மார் இந்தியா ஹேக்கதான் கிராண்ட் ஃபைனாலில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாடினார். அப்போது பேசிய அவர், "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானில் நீங்கள் அனைவரும் கடினமாக உழைக்கிறீர்கள், ஆனால் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. அதனால் தான் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நடக்கும் போதெல்லாம் உங்களுடன் தொடர்புகொள்ள முயற்சிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ரயில்வே சரக்குகளுக்கான ஐஓடி அடிப்படையிலான அமைப்பை உருவாக்கும் குழுவின் திட்டம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். "ரயில்வே சரக்குகளுக்கான IoT அடிப்படையிலான அமைப்பை உருவாக்க இந்த குழு செயல்படுவதாகவும், குழுவில் வங்கதேச மாணவர்களும் உள்ளனர் என்றும் என்னிடம் கூறப்பட்டது. 

இந்திய ரயில்வே தனது மாற்றக் கட்டத்தில் உள்ளது. மத்திய அரசு இதற்காக ஆயிரக்கணக்கான கோடிகளை செலவிடுகிறது, மேலும் எங்கள் கவனம் தளவாடங்களிலும் உள்ளது. உங்கள் கண்டுபிடிப்பு பெரிதும் உதவியாக இருக்கும். உங்கள் அணியில் வங்கதேச மாணவர்களைப் பார்த்தது எனக்கு நன்றாக இருந்தது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு உயர்கல்வி பயில வருவதற்காக, ‘ஸ்டடி இன் இந்தியா’ திட்டத்தை தொடங்கியுள்ளோம்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் "நாம் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதை ஒழுங்குமுறை முறையில் பயன்படுத்தினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், தவறான வழியில் பயன்படுத்தினால் அது உண்மையில் ஆபத்தாக முடியும்; உதாரணமாக, டீப் ஃபேக் வீடியோக்கள். எனவே, ஒரு வீடியோ அல்லது புகைப்படத்தை நம்புவதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். AIக்கான உலகளாவிய கட்டமைப்பிற்கு இந்தியாவும் அழுத்தம் கொடுக்கிறது," என்று அவர் கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு: சிறப்பு ரயில்கள் எங்கிருந்து இயக்கப்படும்?

இந்தியா எந்தத் தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்யக் கூடாது என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும்,  
உலகளாவிய சவால்களுக்கு இந்தியா குறைந்த விலை, தரம், நிலையான தீர்வுகளை வழங்க முடியும் என்று உலகம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios