Punjab's Bathinda Military Station Firing ; பதிண்டா ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு! - சக ராணுவ வீரர் கைது!
Punjab's Bathinda Military Station Firing Incident ; பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாணையில் சக ராணுவ வீரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், பதிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலையில் சரமாரி துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டது. இதில், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, பதிண்டா ராணுவ முகாம், மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்த போலீசார் இது பயங்கரவா தாக்குதல் அல்ல என்றும் தெரிவித்தனர்.
முன்னதாக, பஞ்சாப் ராணுவ முகாமுக்குள் ஒரு துப்பாக்கி, 28 தோட்டாக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, பதிண்டா ராணுவ முகாமுக்குள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் ராணுவ வீரர்களே காரணமாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் உயிரிழந்துள்ளனர். 4 பேரை தவிர வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ராணுவ முகாமும் பாதிக்கப்படவில்லை. அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராணுவ முகாமில் இருந்து துப்பாக்கி மற்றும் 28 குண்டுகள் காணாமல் போனதற்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குமான தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேரில் விளக்கம் தர உள்ளார் என ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் 9 மணி நேர விசாரணையில், பதிண்டா ராணுவ முகாமில் ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் சக ராணுவ வீரர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mahindra: இந்தியாவின் பிரபல கோடீஸ்வரர் கேஷுப் மஹிந்திரா 99 வயதில் காலமானார்!!