இந்தியாவின் பிரபல கோடீஸ்வரரும், மஹிந்திரா & மஹிந்திராவின் முன்னாள்  தலைவருமான கேஷுப் மஹிந்திரா தனது 99வது வயதில் புதன்கிழமை காலமானார்.

மஹிந்திராவின் நிகர சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலராகும். ஆகஸ்ட் 9, 2012 அன்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தனது மருமகன் ஆனந்த் மஹிந்திராவிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

இவரது 48 ஆண்டுகால தலைவர் பொறுப்பில், மஹிந்திரா குழுமம் ஒரு ஆட்டோமொபைல் தயாரிப்பில் இருந்து ஐடி, ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், பிற வணிகப் பிரிவுகள் இன்று வளர்ந்துள்ளது. விரிவடைந்தது.

வில்லிஸ் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, இன்டர்நேஷனல் ஹார்வெஸ்டர், யுனைடெட் டெக்னாலஜிஸ், பிரிட்டிஷ் டெலிகாம் மற்றும் பல உலக நிறுவனங்களுடன் வணிகக் கூட்டணிகளை உருவாக்கி கேஷுப் மஹிந்திரா சிறந்து விளங்கினார். 

"தொழில்துறை உலகம் இன்று மிக உயரமான ஆளுமைகளில் ஒருவரை இழந்துவிட்டது. ஸ்ரீ கேஷூப் மஹிந்திராவுக்கு இணை இல்லை; நான் தெரிந்துகொள்ளும் பாக்கியம் பெற்ற நல்ல மனிதர். நான் எப்போதும் அவருடனான சந்திப்பை விரும்பினேன். மேலும் அவர் வணிகம், பொருளாதாரம் மற்றும் சமூக விஷயங்களை எவ்வாறு இணைத்தார் என்பது குறித்து வியந்து பார்த்துள்ளேன். ஓம் சாந்தி," என்று பவன் கோயங்கா ட்வீட் செய்துள்ளார்.

வளர்ச்சி 5.9 சதவீதம்... இந்தியா தான் வேகமாக வளரும் நாடு: சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றவர் கேஷுப் மஹிந்திரா. அவர் 1947 ஆம் ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்து, 1963 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் தலைவரானார். 

அவர் செயில், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், டாடா ஹோட்டல்ஸ், ஐஎப்சி, ஐசிஐசிஐ உட்பட தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் போர்டு உறுப்பினராக பணியாற்றி உள்ளார். ஹட்கோவின் (ஹவுசிங் அண்ட் ஆர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்) முன்னாள் நிறுவனர் தலைவராகவும் கேஷுப் மஹிந்திரா இருந்தார். ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

உடனே ராஜினமா.! 12 மாத சம்பளத்தை வாங்குங்க - அமேசான், கூகுள் போட்ட அதிரடி உத்தரவு