உடனே ராஜினமா.! 12 மாத சம்பளத்தை வாங்குங்க - அமேசான், கூகுள் போட்ட அதிரடி உத்தரவு
தானாக முன்வந்து ராஜினாமா செய்து, 1 ஆண்டு சம்பளம் பெறுங்கள் என்று கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பெரிய அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவான்கள் உலகம் முழுவதும் மொத்தமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது தொடர்கதையாக மாறி வருகிறது. லேஆப் என்பது முக்கிய வார்த்தையாக மாறியுள்ளது. கூகுள், மெட்டா, அமேசான் உள்ளிட்ட 570 தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023ல் மட்டும் 1,68,918 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது ஐரோப்பாவில் தங்கள் எண்ணிக்கையை மேலும் குறைக்கப் பார்க்கின்றன. இங்கு, தொழிலாளர் நலன் சார்ந்த குழுக்களுடன் முன் ஆலோசனையின்றி சில நாடுகளில் மக்களை பணிநீக்கம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதால், தொழிலாளர் பாதுகாப்பு காரணமாக வெகுஜன பணிநீக்கங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பணிநீக்கங்களைச் செயல்படுத்துவதற்கு முன் நிறுவனங்கள் சட்டப்பூர்வமாக இந்த கவுன்சில்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சட்டம் கட்டளையிடுகிறது. இதில் தரவு சேகரிப்பு, விவாதங்கள் மற்றும் மேல்முறையீடு செய்வதற்கான விருப்பம் ஆகியவை நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையை உள்ளடக்கியதாக இருக்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு, கூகுள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஆகியவை ஊழியர்களை தானாக முன்வந்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. பணிநீக்கச் சிக்கல்களைத் தீர்க்க, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் உள்ள இந்தக் குழுக்களிடம் கூகுள் உதவியை நாடுகிறது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
Google தாய் நிறுவனமான Alphabet Inc, பிரான்சில் உள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தானாக முன்வந்து வேலையை விட்டு வெளியேறினால், அதற்குப் பதிலாக நல்ல பேக்கேஜ்களை கொண்ட சம்பளத்தை பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தேவைகள் காரணமாக, ஜெர்மனி மற்றும் பிரான்சில் உள்ள கூகுள் கிளைகள் பாதிக்கப்படும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. அமேசான் மற்றும் கூகுள் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்..இதை கவனிச்சீங்களா.? அப்படி என்ன ஸ்பெஷல்.!!
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?