Bengaluru:Bangalore floods: வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: காங்கிரஸ்தான் காரணம்: கர்நாடக முதல்வர் மழுப்பல்
பெங்களூரு நகரம் வெள்ளத்தால் தத்தளி்த்து வரும்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மோசமாக நிர்வாகம் நடத்தப்பட்டதால்தான் நகரில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குகிறது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு நகரம் வெள்ளத்தால் தத்தளி்த்து வரும்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மோசமாக நிர்வாகம் நடத்தப்பட்டதால்தான் நகரில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குகிறது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. ஒரே நாள் இரவில் 130மில்லிமீட்டர் மழை பதிவானதால் நகரே வெள்ளத்தில் மிதக்கிறது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது, இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். நீர் மட்டம் அதிகமான பகுதிகளில் மக்கள் படகுமூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூவில் பெய்துவரும் மழைக்கு சித்தாபூராவில் ஒருவரும், மின்சாரம் தாக்கி ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். இன்னும்சில நாட்களுக்கு பெங்களூரு நகரி்ல் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், மக்கள் பீதியில் உள்ளனர்.
பெங்களூரு நகரம் இதுவரை கண்டிறாத மழையை பார்த்து வருகிறது. அங்கு நிலவும் சூழல் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
பெங்களூரு நகரில் இதுவரைஇல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. குளங்கள், ஏரிகள், நிரம்பி வழிகின்றன. விரைவில் இயல்புநிலை திரும்ப அரசு நடவடிக்கை எடுக்கும். பெங்களூரு நகரம் வடிகால் இல்லாமல் இருப்பதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சியின் தவறான நிர்வாகமே காரணம். கடந்த 90 ஆண்டுகளில் பெங்களூரு நகரம் இதுபோன்ற மழையைப் பார்த்தது இல்லை.
பெங்களூரு நகரமே நீரில் தத்தளிப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் நிலவரம் அப்படியில்லை. இரு பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது. மகாதேவ்புரா பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள 69 குளங்கள் நிரம்பி வழிகின்றன.
புதுப்பொலிவுடன் மத்திய விஸ்தா திட்டம்: வரும் 8ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
இரண்டாவதாக மகேதேவ்புராவில் உள்ள பகுதிகள் அனைத்தும் தாழ்வான பகுதிகள், 3வதாக ஆக்கிரமிப்புகள் அதிகம் என்பதால், மழைநீர் செல்லவழியில்லாமல் தேங்கியது
பெங்களூருநகரில் இயல்பு வாழ்க்கையை கொண்டுவர அரசு சவாலாக எடுத்து செயல்பட்டு வருகிறது. பொறியாளர்கள், மாநில பேரிடர் மீட்புப்படையினர் இரவுபகலாக பணியாற்றி வருகிறார்கள்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகம், திட்டமிடல் இல்லாதது போன்றவற்றால்தான் இப்போது சிரமங்களை அனுபவித்து வருகிறோம். ஏரிபகுதியின் வலது, இடது பகுதிகளில் கட்டிடம் கட்ட காங்கிரஸ் அரசு அனுமதியளித்தது. ஆனால் அந்தப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகள்.
கடந்த 1ம் தேதிமுதல் 5ம் தேதிவரை, மகாதேவ்புரா, பொம்மனஹள்ளி, கே.ஆர்புரம் பகுதிகளில் 150மிமீ் அதிகமாக மழை பதிவானது. 307% கூடுதலாக மழை பெய்துள்ளது. கடந்த 42 ஆண்டுகளில் அதிகபட்ச மழைப்பொழிவாகும். பெங்களூருவில் உள்ள 164 குளங்களும் நிரம்பிவி்ட்டன.
இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்