Asianet News TamilAsianet News Tamil

இனி பிளாஸ்டிக் பைகளுக்கு தடா - ஜனவரி 1 முதல் அமல்!

ban for-plastic-bags
Author
First Published Dec 3, 2016, 9:14 AM IST


தலைநகர் புதுடெல்லியில் வெளியேற்றக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்திய தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் கடந்த ஒரு மாதமாக காற்றில் மாசு அதிகரித்து உள்ளது. காலையில் விடிந்து பகல் பொழுது வந்த பின்னரும் காற்றில் மாசு காணப்படுவதால் டெல்லி நகர மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக குழந்தைகளும், வயதானோரும் மூச்சு விட சிரமப்படுகின்றனர். கண் எரிச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். பெருமபாலான பள்ளிகள் பல நாட்கள் முடப்பட்டன.

ban for-plastic-bags

பகல் நேரத்தில் டெல்லியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. மக்கள் மாஸ்க் அணிந்து நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் காற்றில் மாசு தொடர்ந்து அதிகரித்து வருவது, டெல்லி நகர மக்களை வெகுவாக கவலையடையச் செய்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. பசுமை தீர்ப்பாயமும் பல்வேறு உத்தரவுகளை அளித்து வருகிறது.

ban for-plastic-bags

இந்நிலையில், தலைநகர் புதுடெல்லி மற்றும் அதனையொட்டியுள்ள புறநகர் பகுதிகளில்  பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு தேவையான இதர நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் திரு.ஸ்வதண்டெர் குமார் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios