வாராக்கடன்களை எப்போ வசூலிக்கப் போறீங்க?… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடுபிடி…

வங்கிகளில் வாராக்கடன்கள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதிலும் பல்வேறு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன்தொகை திரும்ப வசூலிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

பெரிய தொழில் அதிபர்கள், செல்வந்தர்கள் வங்கியில் இருந்து கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருப்பதால் வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச்சென்றுவிட்டார்.

இந்நிலையில், வங்கிகளுக்கு வர வேண்டிய வாராக்கடன்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் முன்னிலையில், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.