பாபர் மசூதி இடிப்பு.. கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான ஸ்ரீகாந்த் பூஜாரி - ஜாமீன் வழங்கியது கர்நாடக நீதிமன்றம்!
Bail Granted for Srikanth Poojari : கடந்த 1992ல் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் பூஜாரிக்கு ஹூப்பள்ளி நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அன்று ஜாமீன் வழங்கியுள்ளது. காங்கிரஸுக்கு எதிராக அம்மாநிலம் முழுவதும் பாஜக மாபெரும் போராட்டத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்த் பூஜாரியின் வழக்கறிஞர் கூறுகையில், நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளதாகவும், அவர் நாளை மாலை விடுவிக்கப்படுவார் என்றும் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சஞ்சீவ் படசாகா, “நீதிமன்ற உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம், இது நிபந்தனை ஜாமீன். உத்தரவு நகல் இன்னும் பார்க்கப்படவில்லை, ஸ்ரீகாந்த் நாளை மாலை சிறையில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்று அவர் கூறினார்.
ராஜஸ்தானில் டிஜிபிக்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு!
யார் இந்த தா ஸ்ரீகாந்த் பூஜாரி?
51 வயதாகும் ஸ்ரீகாந்த் போஜாரி, ஹுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கர்நாடகாவின் சன்னப்பேட்டையைச் சேர்ந்த வலதுசாரி ஆர்வலர் என்று கூறப்படுகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, 1992ல் ஹுப்பள்ளியில் நடந்த கலவரத்தில் அவர் ஈடுபட்டதாகவும், ஹுப்பள்ளியில் சில கடைகளுக்குத் தீ வைத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து ஹூப்பள்ளி போலீசார் கூறுகையில், பூஜாரி மீது கடந்த 31 ஆண்டுகளில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரம் மற்றும் காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டு தவிர, 1999, 2001 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கலவரத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பூஜாரி மீது சூதாட்டம் மற்றும் சட்டவிரோத மதுபானம் தொடர்பாக பல வழக்குகள் உள்ளன. பூஜாரி ஒருபோதும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் அவர் மீது ஹூப்பள்ளி போலீசார் குற்றம்சாட்டினார். பூஜாரி கடந்த சில வருடங்களாக ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக பணியாற்றி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஸ்ரீகாந்த் மீது தொடரப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும், அவர் தலைமறைவாகவும் இல்லை என்றும் ஸ்ரீகாந்தின் வழக்கறிஞர் இப்பொது கூறியுள்ளார்.
L1 புள்ளியை நாளை சென்றடையும் ஆதித்யா விண்கலம்: தயார் நிலையில் இஸ்ரோ!