அரசு அனுமதித்தால் இந்தியா முழுவதும் ரூ.35.40-க்கு பெட்ரோல் - டீசல் வழங்குவதாக யோக குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியடைய செய்தள்ளது.

யோகா நிபுணர் பாபாராம்தேவ், பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பாஜக ஆதரவாளராகவும் இருந்துள்ளார். ஆங்கில செய்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பாபா ராம்தேவ் பங்கேற்றார். 

அப்போது பேசிய அவர், அரசு சில வரிச்சலுகைகளோடு அனுமதி வழங்கினால், இந்தியா முழுவதும் ரூ.35.40-க்கு பெட்ரோல் - டீசலை வழங்குவேன் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், எரிபொருட்களை ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வர வேண்டும் என்றார். விலையுயர்வு காரணமாக மோடி அரசு கடுமையாக பாதிக்கும் என்றும், அவர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். 

அவரது இந்த பேச்சு, அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

பணத்தை தேடி ஓடுவதில்லை என்ற பாபா ராம்தேவ், பணம் என்னைத் தேடி வருவதாக அப்போது குறிப்பிட்டார். அரசியலில் இருந்து விலகிவிட்டேன் என்றாலும் நான் எல்லா கட்சியிலும் இருப்பேன். எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று கூறினார். பசுக்களை சிலர் மத ரீதியாக பார்க்கின்றனர். ஆனால் பசுவிற்கு மதம் என்பது கிடையாது என்று பாபா ராம் தேவ் கூறினார்.