14 ஆண்டுகள் தூங்காத நபர்.. பகவான் ராமர் என பெயர் சூட்டியவர் யார்? ராமாயணத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்..
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வு பண்டிகையாக கொண்டாடட்டப்பட்டு வரும் இந்த சூழலில் ராமாயணத்தில் உள்ள சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிகவும் எதிர்பார்கக்ப்பட்ட அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ரூ.1800 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கருவறையில் 51 அடி அங்குலபால ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார். நடிகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு பிரபலங்கள் என 7000 சிறப்பு விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர். இந்த ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வு பண்டிகையாக கொண்டாடட்டப்பட்டு வரும் இந்த சூழலில் ராமாயணத்தில் உள்ள சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. ராமர் என்று பெயரிட்டவர் யார்?
தசரத மன்னனுக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற 3 மனைவிகள் இருந்தனர். தசரதன் - கோசலைக்கு பிறந்த மூத்த வசிஷ்ட முனிவர் ராமர் என்று பெயர் சூட்டினார். மேலும் கைகேயியின் மகனுக்கு பரதன் என்றும், சுமித்ரையின் மகன்களுக்கு லட்சுமணன் என்றும், சத்ருக்னன் என்றும் பெயரிட்டார்.
2. ராமாயணத்தின் படி14 வருடங்கள் யார் தூங்கவில்லை, ஏன்?
14 ஆண்டுகள் வனவாச காலத்தின் போது தனது அண்ணன் ராமர் மற்றும் அண்ணி சீதாவின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருநாளும் தூங்கப்போவதில்லை என்று லட்சுமணன் முடிவு செய்தார். எனவே தூக்கத்தின் தெய்வமான் நித்ரா தேவியை அணுகி 14 ஆண்டுகள் தன்னை புறக்கணிக்குமாறு வேண்டிக்கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட நித்ர தேவி, லட்சுமணனின் தூக்கத்தை ஈடு செய்ய வேறொருவர் தூங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அப்போது லட்சுமணன் தனது மனைவி ஊர்மிளாவை பரிந்துரைத்தார். இதன் காரணமாக ஊர்மிளா 14 ஆண்டுகள் தூங்கிக் கொண்டிருந்ததாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
3. இலங்கை மன்னன் ராவணன் அசுர குலத்தில் பிறக்கவில்லை. அவர் எந்த குலத்தில் பிறந்தார்?
பிரம்மாவின் புதல்வர்களில் புலஸ்தியரும் ஒருவர். சப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்தியரின் மகனான விஸ்ரவ முனிவரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் குபேரன். விஸ்ரவ முனிவருக்கும் – அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்கள் தான் இராவணன், கும்பகர்ணன், வீபீஷணர் மற்றும் சூர்ப்பனைல். எனவே ராவணன் புலஸ்தியரின் குலத்தை சேர்ந்தவர்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பை அடுத்து 11 நாள் விரத்தை முடித்த பிரதமர் மோடி!
4. சீதை எந்த தெய்வத்தின் அவதாரம்?
அனகாவின் அவதாரம் தான் சீதா என்று நம்பப்படுகிறது. அனகா என்பது லட்சுமி தேவியின் மற்றொரு பெயராகும். விஷ்ணுவின் அவதாஅரமான ராமரை சீதை மணந்தார். இதுவே ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்திற்கு பின்னணியில் உள்ள காரணமாகும்.
5. வால்மீகி ராமாயணம் எத்தனை காண்டங்களை (அத்தியாங்கள்) கொண்டுள்ளது.
ராமாயணம் 7 காண்டங்களை கொண்டது. பால காண்டம், அயோத்திய காண்டம் ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் ஆகியவை ஆகும்.
6. தசரதனின் 4 மகன்களில் இரட்டையர்கள் யார்?
லட்சுமணன், சத்ருகனன். இருவரும் தசரத மன்னரின் 2-வது மனைவியான சுமித்ரைக்கு பிறந்தவர்கள்.
7. ராவணனுக்கு எத்தனை உடன்பிறப்புகள் இருந்தனர்?
ராவணனுக்கு 8 உடன்பிறப்புகள் இருந்தனர். அவர்கள் கும்பகர்ணன், விபீஷணன், கார், அஹிரவன், குபேர், துஷாணன், சூர்ப்பனகை மற்றும் கும்பினி.
8. சீதை ராவணனால் கடத்தப்பட்ட பிறகு, ஒரு புராணப் பறவை அவளைக் காப்பாற்ற முயற்சிக்கிறது. அதன் உறவினர் யார்?
சீதையைக் காப்பாற்ற முயலும் கழுகு போன்ற பறவை ஜடாயு. ராமாயணத்தின் புகழ்பெற்ற பறவை கருடனின் உறவினர் என்று கூறப்படுகிறது.
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை : சிறப்பு பிரசாத பெட்டியில் என்னென்ன பொருட்கள் உள்ளது தெரியுமா?
9. கைகேயியின் விருப்பமான பணிப்பெண் யார்? அவர் செய்த சூழ்ச்சி என்ன?
கைகேயிக்கு விருப்பமான பணிப்பெண் மந்தரை ஆவார். அவர் கூனி என்றும் அழைக்கப்படுகிறார். ராமருக்குப் பதிலாக தன் மகன் பரதனை அரசனாக முடிசூட வேண்டும் என்ற ஆசையை கைகேயியிடம் விதைத்தவர் மந்தரை தான். மந்தரையின் சூழ்ச்சியின காரணமாகவே ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய நேர்ந்தது.
10. ராமாயணத்தை எழுதிய வால்மீகி அதற்கு முன்பு என்ன பெயரில் அழைக்கப்பட்டார்?
வால்மீகி முனிவர் ரத்னாகர் என்று அழைக்கப்பட்டார். அவர் தனது கடந்த காலத்தில் பல குற்றங்களை செய்துள்ளார். மேலும் கொள்ளை செயல்களிலும் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது.
- Lord Rama
- PM Modi in Ayodhya Ram Temple Inauguration
- Ram Mandir
- Ram Mandir Ayodhya
- Ram Mandir Consecration Ceremony
- Ram Mandir Inauguration
- Ram Mandir Inauguration Ceremony
- Ram Mandir Opening Ayodhya
- Ram Mandir Opening Ceremony
- Ram Mandir Photo
- Ram Temple Ayodhya
- Ram Temple Inauguration
- Ramayana
- ayodhya ram mandir news
- pm modi
- pran pratishtha
- pran pratishtha Ram mandir
- ramayan
- ramayan quiz
- ramayan trivia
- Ayodhya Ram Temple