அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு.. "ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா" பெயரில் மோசடி? - பக்தர்களே உஷார்!

Ayodhya Ramar Temple : அயோத்தியில் ராமர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நெருங்கி வரும் நிலையில், புனித கோவிலின் பெயரில் பக்தர்களை கொள்ளையடிக்கும் கும்பல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ayodhya Ramar Temple QR Code Scam in the name of Shri Ram Janmbhoomi Teerth Kshetra ans

சைபர் குற்றவாளிகள் கோவிலின் பெயரில் நன்கொடை கோரி சமூக ஊடக செய்திகளை எவ்வாறு வெளியிடுகிறார்கள் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) எச்சரித்துள்ளது. குறிப்பாக அந்த மோசடி கும்பல் QR குறியீடுகளை பயன்படுத்தி தான் பணம் மோசடி செய்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விஷ்வா ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறுகையில், இந்த விவகாரம் டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறைத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா, நிதி வசூலிக்க யாரையும் அங்கீகரிக்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

நெருங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்.. பெங்களூரு Phoenix Mall of Asia மூடப்படுகிறது - ஏன்? அதிகாரிகள் விளக்கம்

திரு. பன்சால் வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில், கோயிலின் பெயரில் பணம் வசூலிக்கும் "அசிங்கமான" முயற்சிகள் குறித்து சமீபத்தில் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. "ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர நியாஸ் நிதி வசூலிக்க யாரையும் அனுமதிக்கவில்லை. இதுபோன்ற மோசடிகளுக்கு மக்கள் பலியாகாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை அமைச்சகம், உத்தரபிரதேச டிஜிபி மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன், "என்று அவர் கூறினார். 

கோவிலுக்கு நன்கொடை வழங்குமாறு சமூக ஊடக செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் சிலவற்றை கேட்டதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. அழைப்பைப் பெற்ற நபர்களில் ஒருவர் VHP ஊழியர்களுடன் அந்த எண்ணைப் பகிர்ந்து கொண்டார். விஎச்பி ஊழியர் ஒருவர் அந்த எண்ணுக்கு போன் செய்து மோசடி செய்பவர்களின் தந்திரங்களை கண்டறிந்துள்ளார். 

பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி அழைப்பின் ஆடியோ கிளிப்பை VHP பகிர்ந்துள்ளது, அந்த அழைப்பில், விஹெச்பி ஊழியர் கோவிலுக்கு நன்கொடை அளிக்க விரும்புவதாக தன்னை கட்டிக்கொள்கிறார். மேலும் தான்11,000 நன்கொடை அளிக்க விரும்புவதாகவும், தன் கிராமத்தில் உள்ள மற்றவர்களும் நன்கொடை அளிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறும்போது, ​​மறுபுறம் அந்த மோசடி ஆசாமி QR குறியீட்டை அனுப்பக்கூடிய வாட்ஸ்அப் எண்ணைக் கேட்கிறார்.

பாலியல் வன்கொடுமை? எதிர்த்து கேட்ட இளம் பெண்.. கொதிக்கும் எண்ணெயில் தள்ளப்பட்ட கொடூரம் - என்ன நடந்தது?

மேலும் தங்களை போல இன்னும் பல பேர் "ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா" சார்பாக நன்கொடை வசூல் செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் "ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா" எந்தவித நன்கொடைகளையும் பெறவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகவே பக்தர்களும் விழிப்போடு இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios