ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நுழைவு விதிகள், ஆரத்தி நேரம்.. மேலும் பல முக்கிய தகவல்கள் இதோ..

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22, 2024 அன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது

Ayodhya Ram Temple Inauguration: Entry Rules, Aarti Timings.. and more important informations check here.. Rya

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22, 2024 அன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் பிரமாண்ட கும்பாபிஷேக விழாவை இந்தியாவில் பூத் வாரியாக நேரடியாக ஒளிபரப்பும் திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது. இருப்பினும், அன்றைய தினம் ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே அயோத்தி ராமர் கோயிலில் எப்போது ஆரத்தி நடத்தப்படும் என்பது போன்ற பல கேள்விகள் பலரின் மனதில் இருக்கலாம். இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்

ராமர் கோவிலில் எப்போது ஆரத்தி செய்யப்படும்?

அயோத்தி ராமர் கோயிலில் ஒரு நாளைக்கு மூன்று முறை ஆரத்தி செய்யப்படும். ராமர் பக்தர்கள் காலை 6:30, மதியம் 12:00 மற்றும் இரவு 7:30 மணிக்கு ஆரத்தியில் பங்கேற்கலாம். ஆரத்தியில் கலந்துகொள்ள, அறக்கட்டளை மூலம் ஒரு பாஸ் வழங்கப்படுகிறது, அதில் நீங்கள் அடையாளச் சான்று வழங்க வேண்டும்.

ஆன்லைனில் "ஆரத்தி பாஸ்" முன்பதிவு செய்வது எப்படி?

  • ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் srjbtkshetra.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
  • உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP (ஒரு முறை கடவுச்சொல்) பயன்படுத்தி உள்நுழையவும்
  • முகப்புப் பக்கத்தில், 'Aarti' பகுதியைக் கிளிக் செய்யவும்
  • இப்போது நீங்கள் கலந்துகொள்ள விரும்பும் ஆரத்தியின் தேதி மற்றும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்
  • பக்தர்களின் பெயர், முகவரி, புகைப்படம், மொபைல் எண் போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  • பின்னர் ராமர் கோவிலுக்குச் செல்லும்போது, கவுண்டரில் இருந்து "Aarti Pass" எடுத்துக் கொள்ளுங்கள்

நுழைவு விதிகள்

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்குள் நுழையும் போது மொபைல் போன்கள், இயர்போன்கள் அல்லது வேறு ஏதேனும் கேஜெட்கள் போன்ற எலக்ட்ரிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்பவர்கள் ஜனவரி 22 ஆம் தேதி காலை 11:00 மணிக்கு முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் நுழைய வேண்டும். ராமர் கோவில் திறப்பு விழாவின் போது பாரம்பரிய இந்திய உடைகளை அணியலாம். ஆண்கள் வேட்டி அல்லது குர்தா பைஜாமா அணியலாம். அதேசமயம் பெண்கள் சல்வார் சூட் அல்லது புடவை அணியலாம். இருப்பினும், இது தொடர்பாக ராமர் கோயில் அறக்கட்டளையால் எந்த ஆடைக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

1987இல் காங்கிரஸுக்கு எதிராக பிரதமர் மோடி நடத்திய நியாய யாத்திரை!

சிலை பிரதிஷ்டை நேரம் என்ன?

22 ஜனவரி 2024 அன்று ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். காசியின் வேத பண்டிதர்கள் கும்பாபிஷேகத்தை நடத்துவார்கள். மதியம் 12:15 முதல் 12:45 வரை ராமர் சிலை நிறுவப்படும். 

அயோத்தி ராமர் கோவிலின் நீளம், அகலம் மற்றும் உயரம் என்ன?

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் நீளம் 380 அடி, அகலமும் 250 அடி. உயரம் 161 அடி. இந்த கோவில் மூன்று தளங்களில் கட்டப்பட்டு வருகிறது. கோயிலில் 44 வாயில்களும் 392 தூண்களும் இருக்கும்.

கோவில் வாசல் எப்படி இருக்கும்?

நீங்கள் ராமர் கோவிலுக்குள் நுழைந்தவுடன், முதலில் கிழக்குப் பக்கத்திலிருந்து கோவிலுக்குள் நுழைவீர்கள், 32 படிக்கட்டுகளில் ஏறி சிங் துவாரைக் கடந்து செல்வீர்கள். பகவான் ராமரின் புதிய சிலை நிறுவப்பட்டாலும், ராமர் கோயிலின் கருவறையில் புதிய சிலையுடன் ராம் லல்லாவின் பழைய சிலையும் வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தி: ராமர் கோவில் விழா ஏற்பாடுகள் மும்முரம்.. ராமர் சிலை குறித்து அறக்கட்டளை சொன்ன முக்கிய தகவல்!

ராமர் கோவில் வளாகத்தில் வேறு யாருடைய கோயில்கள் இருக்கும்?

ராமர் கோயில் வளாகத்தைச் சுற்றி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய பகவான், பகவதி அம்மன், விநாயகர்,  அன்னப்பூரணி, அனுமன், விஸ்வாமித்ர, அகஸ்தியர், வால்மீகி, போன்ற மகரிஷிக்களுக்கும் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. .

பக்தர்களுக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது?

ராமர் கோவிலில் பக்தர்களுக்காக உலகத்தரம் வாய்ந்த வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன, அதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு சாய்வுதளம் மற்றும் லிப்ட்கள் வழங்கப்படும். மேலும், கோயில் அறக்கட்டளை 25,000 பேர் தங்கக்கூடிய ஒரு யாத்ரீகர்கள் வசதி மையத்தை (PFC) நிர்மாணித்து வருகிறது. இது பக்தர்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் லாக்கர் வசதிகளை வழங்கும். குளிக்கும் இடம், கழிவறைகள், வாஷ்பேசின், திறந்த குழாய்கள் போன்ற வசதிகளும் இருக்கும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios