அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பொதுமக்கள் தரிசனத்துக்கு எப்போது அனுமதி?
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையடுத்து, குழந்தை ராமரை தரிசிக்க பொதுமக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையடுத்து, குழந்தை ராமரை தரிசிக்க பொதுமக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜனவரி 22ம் தேதி மதியம் 2 மணி வரை கோவில் வளாகத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அயோத்தி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு கோவில் கதவுகள் மூடப்படும். அன்றைய தினம் குழந்தை ராமரை யாரும் தரிசிக்க முடியாது.
ஜனவரி 20ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு குழந்தை ராமரை தரிசனம் செய்ய சாதாரண மக்கள் மட்டுமின்றி விஐபிகளும் கூட தரிசிக்க முடியாது. ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக நாளில் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பட்டவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். பிரான் பிரதிஷ்டா திட்டத்தின் கீழ், ஜனவரி 15 முதல் 24 வரை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதன்பிறகு, ஜனவரி 25ஆம் தேதி முதல் கோயில் கதவுகள் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும். தரிசனத்திற்கு மக்கள் அடையாள ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, அயோத்தி ராம ஜென்மபூமி நுழைவுப் பகுதியில் நுழைவு வாயில் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பெரிய இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. ராமர் பக்தர்களுக்கான கொட்டகை கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. ராம் லல்லாவை தரிசனம் செய்வதற்காக சோதனைச் சாவடியில் வரிசையில் நிற்கும் பக்தர்கள் தங்கள் முறைக்காக காத்திருக்கின்றனர்.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் நுழைவாயிலிலேயே இலவச லாக்கர் வசதி உள்ளது. பக்தர்கள் சேவை மையமும் உள்ளது. இங்கு பக்தர்கள் ஆரத்தியில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. பக்தர்கள் தங்களின் உடமைகளை லாக்கரில் வைத்துக் கொள்ளலாம் என்றும் அங்கிருந்து சீட்டு மற்றும் சாவியை பெற்றுக் கொண்டு தரிசனம் செய்யலாம் என்றும் அம்மாநில அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ராம்லாலாவை தரிசனம் செய்யும்போது, மொபைல், வாட்ச், எலக்ட்ரானிக் பொருட்கள், ரிமோட் சாவி, ஹெட்போன் போன்றவற்றை பொதுமக்கள் எடுத்துச் செல்ல முடியாது. இவற்றை கோவில் வளாகத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சோதனைகள் நடைபெறுகிறது. அந்த நேரத்தில் தடை செய்யப்பட்ட பொருள் ஏதும் கிடைத்தால், பக்தர்கள் தரிசனம் செய்யாமல் திரும்ப வேண்டியிருக்கும்.
குளிர் காலம் என்றால், மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள சூடான ஆடைகளை அணியலாம். இந்த விதிகள் புதியதல்ல. ஏற்கனவே அமலில் உள்ளவைதான். முன்பெல்லாம் தனியார் லாக்கர்களில் மக்களின் தங்களது உடைமைகள் ரூ.5 முதல் ரூ.10 வரை பணம் செலுத்தி வைத்துச் சென்றனர். தற்போது, மக்களின் வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அறக்கட்டளை மூலம் இலவச லாக்கர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல்: முதல்வரிடம் நிதியளித்த திமுக எம்.பி.க்கள்!
ராம்லாலாவின் மும்முறை ஆரத்திக்கான அனுமதிச் சீட்டுகள் பற்றிய தகவல்கள் வசதி மையத்தில் சுவரொட்டிகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நன்கொடை கவுண்டர் மற்றும் ஹோமியோபதி சிகிச்சை மையமும் உள்ளது. மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை மருத்துவரை தொடர்பு கொள்ளலாம். காலை 7 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 7 மணி வரையிலும் கோயிலுக்குச் செல்லலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலி வசதியும் உள்ளது. மக்கள் அமர்வதற்கு பெஞ்சுகளும் போடப்பட்டுள்ளன.
மறுபுறம், அயோத்தி தாமில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக தினத்தன்று, அந்தந்த கிராமங்கள், உள்ளாட்சிகள், கோயில்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“ராம பக்தர்களைக் கூட்டி பஜனை கீர்த்தனை செய்யுங்கள். கும்பாபிஷேக விழாவை டிவி அல்லது எல்இடி மூலம் மக்களுக்குக் காட்டுங்கள். உங்கள் வீட்டில் உள்ள கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு பஜனை-கீர்த்தனை-வழிபாடு செய்யுங்கள். வீட்டின் முன் விளக்குகள் ஏற்றுங்கள். 500 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புனிதமான தருணம் வந்துள்ளது.” என அவர் கூறியுள்ளார்.