அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை 40 நாட்கள் விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த நவம்பர் 9-ம் தேதி தேதி தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும். கோவில் கட்டுவதை பார்வையிட அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும்.

மேலும், மசூதி கட்டுவதற்காக வேறு இடத்தில் 5 ஏக்கரில் நிலம் அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பொதுவாக அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்து.

இந்நிலையில், அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம், அதன் அவசர செயற்குழுவை இன்று காலை 11 மணிக்கு லக்னோவில் கூடியது. அதில், அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யவும், அயோத்தி தீர்ப்பில் சில அம்சங்களை மாற்றக்கோரியும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சீராய்வு மனு தயார் செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சன்னி மத்திய வக்பு வாரியம், சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.