Asianet News TamilAsianet News Tamil

வல்லுனர்களுக்கு செம்மொழி தமிழாய்வு சார்பில் விருது - குடியரசுத்தலைவர் வழங்கி கவுரவம்...

Award for Classical Tamil Translation - Presidential Honor
award for-classical-tamil-translation---presidential-ho
Author
First Published May 9, 2017, 6:28 PM IST


வல்லுனர்களுக்கு செம்மொழி தமிழாய்வு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. இதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.

2013 -14, 2014 - 15, 2015 - 16 ஆம் ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழாய்வு சார்பில் வல்லுனர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.

தொல்காப்பியர், இளம் அறிஞர் விருதுகளை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வழங்குகிறது.

2013 - 14 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப்பட்டது.

பாலசுப்ரமணியன், செழியன், ராஜலக்ஷ்மி, மகாலட்சுமி, சாலாவாணிஸ்ரீ ஆகியோருக்கு இளம் அறிஞர் விருது வழங்கப்பட்டது.

2014 -15 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது முனைவர் தட்சிணாமூர்த்திக்கு வழங்கப்பட்டது.

அ.சதீஷ், முத்துசெல்வன், திருஞானசம்பந்தம், வசந்தகுமாரி, கோ.சதீஷ் ஆகியோருக்கு இளம் அறிஞர் விருது வழங்கப்பட்டது.

2015 -16 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது முனைவர் கலைக்கொவனுக்கு வழங்கப்பட்டது.

வனிதா, பிரகாஷ், பிரேம்குமார், பாலாஜி, முனீஸ்மூர்த்தி ஆகியோருக்கு இளம் அறிஞர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios