சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் சமையல் செய்ய தடை; அதிகாரிகள் உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், பம்பை முதல் சன்னிதானம் வரையில் பக்தர்கள் சமைகச்க தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 30ம் தேதி மாலை 5 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்பதின் அடிப்படையில் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் உடனடி முன்பதிவு மூலமாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை; அனைவருக்கும் பொதுவானவன் - உயநிதி ஸ்டாலின்
அந்த வகையில் கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் மகர விளக்கு பூஜை சமயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்பதால், நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது குறித்து மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் வருகின்ற 11ம் தேதி முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் மகரவிளக்கு பூஜையை பார்ப்பதற்காக ஆங்காங்கே தங்குவது வழக்கம். இந்த ஆண்டும் அது போல் பக்தர்கள் தங்களாம். ஆனால், பக்தர்கள் பம்பை முதல் சன்னிதானம் வரையிலான பகுதிகளில் பக்தர்கள் சமைக்க அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை முறைபடுத்தும் விதமாக பம்பை முதல் சன்னிதானம் வரை பயணம் செய்யும் சரக்கு வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த பகுதிகளில் உள்ள கடைகளில் சமையல் செய்வதற்கான பாத்திரங்களை விற்பனை செய்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பம்பை முதல் சன்னிதானம் வரையில் தேவஸ்தானம், வருவாய், காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தேவைப்படும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.