பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..! திமுக நிர்வாகிகள் நள்ளிரவில் கைது.! கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்
திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிகழ்வில், திமுக நிர்வாகிகள் இரண்டு பேரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை
திமுக பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துனைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகியயோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் உயர் அதிகாரியிடம் கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இரண்டு பேரில் ஒருவரை கைது செய்த நிலையில் மற்றொருவர் தப்பி சென்றுள்ளார். அவரையும் போலீசார் விரட்டி சென்று பிடித்துள்ளனர். இதன் காரணமாக பொதுக்கூட்டம் நடந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் சென்ற போது விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா தடுத்து நிறுத்தியதாகவும், கைது செய்யக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
திமுகவில் உள்ள ரெளடிகளுக்கு தைரியம் வந்துவிட்டது.. கொந்தளித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
அரசியல் கட்சிகள் கண்டனம்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலை தளத்தில் செய்தியாக வெளியானது இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அதிமுக, பாஜக, உள்ளிட்ட பல்வேறு அரிசியல் கட்சியினர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும், குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக சுற்றுவதாவும் தெரிவித்து இருந்தனர். மேலும் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்தநிலையில் பெண் காவலரிடம் திமுக நிர்வாகிகள் மன்னிப்பு கேட்டதையடுத்து காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை பெண் காவலர் திரும்ப பெற்றுக்கொண்டார். ஆளுங்கட்சியின் மிரட்டல் காரணமாகவே புகார் வாபஸ் பெறப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
திமுகவில் இருந்து நீக்கம்
இந்தநிலையில் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கட்சியில் இருந்து நீக்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் வடக்கு பகுதி, 129அ-வது வட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரவீன் மற்றும் சி.ஏகாம்பரம் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். இந்தநிலையில் திமுக நிர்வாகிகள் பிரவீன் மற்றும் ஏகாம்பரத்தை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்துள்ளனர்
இதையும் படியுங்கள்