MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • தேமுதிக முடிவால் மொத்தமாக மாறும் தேர்தல் களம்.! காங்கிரசுடன் சேர்ந்து வெளியேறுகிறதா கம்யூனிஸ்டுள்.?!

தேமுதிக முடிவால் மொத்தமாக மாறும் தேர்தல் களம்.! காங்கிரசுடன் சேர்ந்து வெளியேறுகிறதா கம்யூனிஸ்டுள்.?!

தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அதிருப்தியில் உள்ளதாகவும் மும்முனைப் போட்டியாக மாற்றக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 20 2026, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஓட்டு போட காத்திருக்கோம்
Image Credit : X/Twitter

ஓட்டு போட காத்திருக்கோம்

தேர்தல் நெருங்க நெருங்க வேட்பாளர்களை விட வாக்காளர்களுக்கே படபடப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் புதிய தேர்தல் களம் வெற்றியை தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதாகவே இருக்கிறது என தேர்தல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டணிக் கணக்குகள், தொகுதிப் பங்கீடு மோதல்கள் மற்றும் எதிர்பாராத அரசியல் நகர்வுகள் தினந்தோறும் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, தேமுதிக (DMDK) எடுத்துள்ள சமீபத்திய முடிவுகள் மற்றும் திமுக கூட்டணியில் நிலவும் சலசலப்புகள் தமிழகத்தின் பாரம்பரிய தேர்தல் வியூகங்களை மொத்தமாக மாற்றி அமைக்கும் சூழலை உருவாக்கியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேமுதிகவின் அதிரடி முடிவும் தேர்தல் மாற்றமும்
Image Credit : X

தேமுதிகவின் அதிரடி முடிவும் தேர்தல் மாற்றமும்

தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது எடுத்துள்ள முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பல ஆண்டுகளாக அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வந்த தேமுதிக, தற்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த மாற்றம் ஆளுங்கட்சிக்கு பலத்தைச் சேர்த்தாலும், எதிர்க்கட்சியான அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்திருந்தாலும், 3% முதல் 5% வரையிலான வாக்குகள் நெருக்கடியான போட்டியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

Related Articles

Related image1
அலுவலகத்தை காலி செய்யும் தவெக.. ஆதவுக்கு செக் வைக்கும் மாமனார்..! பின்னணியில் திமுக?
Related image2
விஜய் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா..? தவெக-வே லாட்டரி பணத்தில்தான் நடத்தப்படுது.. ஜெயகுமார் அதிரடி அட்டாக்..!
35
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் அதிருப்தி
Image Credit : our own

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் அதிருப்தி

தேமுதிகவின் வருகையால் திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையே அதிருப்தி நிலவுவதாகத் தகவல்கள் வருகின்றன. குறிப்பாக. தேமுதிகவிற்கு அதிக தொகுதிகள் அல்லது ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படலாம் என்ற சூழலில், காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் ஒதுக்கப்படும் இடங்கள் குறைய வாய்ப்புள்ளது. காங்கிரஸ் தரப்பில் கடந்த ஆண்டிலிருந்தே ஆட்சிப் பங்கீடு குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக இதனை ஏற்க மறுப்பதால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா கூறப்படுகிறது.!

45
கம்யூனிஸ்டுகள் வெளியேறுகிறார்களா?
Image Credit : Asianet News

கம்யூனிஸ்டுகள் வெளியேறுகிறார்களா?

இடதுசாரிகளைப் பொறுத்தவரை, புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் இடையே நிலவும் தலைமைப் போட்டியால் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்திலும் தங்களுக்குரிய முக்கியத்துவம் குறையும் பட்சத்தில், காங்கிரஸுடன் இணைந்து அவர்கள் ஒரு மாற்று அணி குறித்துச் சிந்திப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய சக்திகளுடன் இவர்கள் இணையக்கூடும் என்ற யூகங்களும் வலுக்கின்றன.

55
விஜய் பக்கம் வீசும் காத்து.!
Image Credit : Google

விஜய் பக்கம் வீசும் காத்து.!

தேமுதிகவின் வருகை ஒருபுறம் திமுகவை வலுப்படுத்தினாலும், அது நீண்டகால கூட்டணிக் கட்சிகளின் வெளியேற்றத்திற்கு வழிவகுத்தால் தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறும். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகளே தமிழக அரசியலில் ஒரு மெகா கூட்டணி உருவாவதா அல்லது பிளவு ஏற்படுவதா என்பதைத் தீர்மானிக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
விஜய் (நடிகர்)
திமுக
திமுக கூட்டணி கட்சிகள்
இந்திய தேசிய காங்கிரஸ்
பிஜேபி

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK : முன்கூட்டியே முடிவுக்கு வரும் தவெக ஆட்சி? 2029-ல் நடக்கப்போகும் தேர்தல்?
Recommended image2
DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
Recommended image3
Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?
Related Stories
Recommended image1
அலுவலகத்தை காலி செய்யும் தவெக.. ஆதவுக்கு செக் வைக்கும் மாமனார்..! பின்னணியில் திமுக?
Recommended image2
விஜய் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா..? தவெக-வே லாட்டரி பணத்தில்தான் நடத்தப்படுது.. ஜெயகுமார் அதிரடி அட்டாக்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved