1947 ஆம் ஆண்டு, பிப்ரவரி 1௦ ஆம் தேதியில், இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக “ மவுண்ட் பேட்டன்” பதவியேற்றார். இவருக்கும் நேரு மற்றும் ஜின்னா  இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் சுமுகமான  தீர்வு  எட்டப்படவில்லை.காரணம், ஜின்னா தனிநாடு வேண்டும் என்பதில்  மும்முரமாக இருந்தார்.

இதனை  தொடர்ந்து நாட்டில் அசாதாரண சூழல் நிலவியதால், முன்னதாகவே சுதந்திரம் கொடுக்க  வேண்டிய நிலைப்பாடு ஏற்பட்டது.எனவே ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம்  கொடுக்க முடிவு செய்தார் மவுண்ட் பேட்டன். அதாவது 1945 ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்பது, இரண்டாம் உலகப் போரின்  முடிவில், ஆங்கிலேயர்களின்  கிழக்கு  ஆசிய கமாண்டராக இருந்த  மவுண்ட் பேட்டனிடம்  ஐரோப்பிய  வீரர்கள் சரணடைந்தனர்.எனவே  தான் இந்த தேதியில் தான்  சுதந்திரம் கொடுக்க வேண்டுமென  முடிவாக இருந்தார் மவுண்ட் பேட்டன்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி  சரியில்லை...

இந்நிலையில்,  ஆகஸ்ட் 15 ஆம் தேதி சரில்லை என ஜோதிடர்கள் இந்திய தலைவர்களுக்கு  கோரிக்கை வைத்தனர்.இந்த கோரிக்கையை ஏற்காத மவுண்ட் பேட்டன் தரப்பில் ஒரு விளக்கம் தரப்பட்டது.

அதாவது ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 என்பது புதிய நாள்.ஆனால் இந்தியர்களுக்கு அதிகாலை 5 மணி தான் புதிய நாள் என தெளிவு செய்துள்ளனர்.

இதனை இந்திய தலைவர்கள் ஒப்புக்கொண்டதால்,14 ஆம் தேதி  நள்ளிரவே இந்தியாவிற்கு சுதந்திரம்  வழங்கப்பட்டது.