Assam MLA carries cremates body of poor man
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு எம்எல்ஏ ஆதரவற்ற ஒரு நபரின் பிணத்தை தூக்கி சென்று அடக்கம் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்காட் எனும் பகுதியில் வசித்து வருகிறார் இந்த எம்.எல்.ஏ இவருடைய வீட்டின் அருகில் திலீப் என்ற ஆதரவற்ற நபர் இறந்துள்ளார்.
அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஒரு மாற்று திறனாளியாம். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் மரணம் அடைந்த திலீப்பை அடக்கம் செய்ய ஒரு சிலர் முன்வந்துள்ளார்.
அந்த சமயத்தில் அப்பகுதி எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மி, திலீப் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளார்
அதுமட்டுமில்லாமல், திலீபின் இறுதி சடங்குகளை நல்ல முறையில் நடத்தி கொடுத்திருக்கிறார். மேலும் திலீபின் உடலை சுடு காடு வரை சுமந்தும் சென்றிருக்கிறார் ரூப்ஜோதி.

ஒரு எம்எல்ஏ சக மனிதரின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு உதவி செய்ததையும் மீறி, திலீப் உடலை தூக்கி செல்வதில் அவர் முன் வந்து செய்துள்ளார்.
ஒரு எம்எல்ஏ இந்த அளவிற்கு இறங்கி வந்து செய்துள்ளாரே என்று அந்த பகுதி மக்கள் எம்எல்ஏ வை வெகுவாக பாராட்டி வருகின்றார்.
நாடு முழுவதும் இந்த எம்எல்ஏ விற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
