உண்மையின் பாதையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த ஏசியாநெட் நியூஸ்!
ஊடகங்கள் பெரும்பாலும் பரபரப்பிற்கு முன்னுரிமை கொடுக்கும் இந்தக் காலத்தில், ஏசியாநெட் நியூஸ் உண்மையை அறிந்து செய்தி வழங்குவதில் உறுதியாக உள்ளது. இது மலையாள செய்தி ஊடகத்துறைக்கு வழிகாட்டுவதாக இருக்கிறது.
உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவரும் முன்னோடி மலையாள செய்தி சேனலான ஏசியாநெட் நியூஸ், 30 வருடங்களை நிறைவு செய்துள்ளது. மலையாள சமூகத்திற்கு நம்பகமான செய்திகளை வழங்கும் சேவையில் இந்த புதிய மைல்கல்லை எட்டியிருப்பதை ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
ஏசியாநெட் நியூஸ், மலையாள சமூகத்திற்கு செய்திகளை வழங்குவதற்காக 1993 முதல் இயங்கி வருகிறது. இந்தியாவில் தனியார் செய்தி ஒளிபரப்பில் முன்னோடியாக இருக்கிறது. சமூகப் பொறுப்புள்ள தொலைநோக்கு பார்வையுடன் நிறுவப்பட்ட, ஏசியாநெட் செய்தி சேனலை அப்போதைய முதலமைச்சர் கே. கருணாகரன் தொடங்கி வைத்தார். கே.ஆர்.நாராயணன் ஸ்டுடியோவைத் திறந்து வைத்தார்.
ஏசியாநெட் நியூஸின் மக்கள் நலன் சார்ந்த செய்திகளும் சமூகம் அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுடன் வலுவான பிணைப்பை வளர்த்துள்ளன. நெருக்கடியான காலங்களில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் மற்றும் நம்பிக்கையை அளித்து தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறது.
ட்ரெண்ட்டை மாற்றும் விவசாய நில முதலீடு! கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
2001ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலின் நெஞ்சை உலுக்கும் காட்சிகள், குஜராத் பூகம்பம் நடந்த இடத்திலிருந்து கள நிலவரங்கள், 2004 சுனாமி பேரழிவை நேரில் பார்த்தவர்களின் பதிவுகள் மற்றும் கார்கில் போர் முனையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திகள் ஆகியவை ஏசியாநெட் நியூசின் இடைவிடாத பயணத்தில் அடங்குகின்றன.
செய்தி வழங்குவதில் உண்மைத்தன்மையை உறுதிசெய்வது எப்போதும் ஏசியாநெட் நியூஸின் கொள்கையாக இருந்து வருகிறது. இதனால் ஏசியாநெட் நியூஸ் வெளியிட்ட செய்திகள் வாழ்க்கையை மாற்றுவதாகவும் அமைந்துள்ளன.
ஏசியாநெட் நியூஸ் நாட்டு நடப்புகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது. 1996 சட்டமன்றத் தேர்தலின்போது உடனுக்குடன் நேரலையில் செய்திகளை வழங்கியது பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. மாராரிகுளத்தில் வி.எஸ்.அச்சுதானந்தன் தேர்தலில் தோல்வியடைந்த செய்தியை அறிந்துகொள்ள மலையாளிகள் மறுநாள் வரும் செய்தித்தாளுக்காகக் காத்திருக்கவில்லை. ஏசியாநெட் நியூஸ் மூலம் உடனடியாக அறிந்துகொண்டனர்.
1998 இல் இ.எம்.எஸ் இறந்தது, 2004 இல் ஐ.கே. நாயனாரின் இறுதி ஊர்வலம் உள்ளிட்ட பல முக்கியமான தருணங்களை ஏசியாநெட் நியூஸ் ஒளிபரப்பியது. கே. கருணாகரன் மற்றும் உம்மன் சாண்டியின் இறுதிப் பயணங்களின்போதும் பார்வையாளர்கள் ஏசியாநெட் வெளியிட்ட நேரலை மூலம் அவர்களுகுகப் பிரியாவிடை கொடுத்தனர்.
விரிவான கள அனுபவம், அரிய காட்சிப் பதிவுகள் மற்றும் திறமையான பத்திரிகையாளர்களுடன் ஏசியாநெட் நியூஸ் வலுவானதாக இருக்கிறது. உள்ளது. ஊடகங்கள் பெரும்பாலும் பரபரப்பிற்கு முன்னுரிமை கொடுக்கும் இந்தக் காலத்தில், ஏசியாநெட் நியூஸ் உண்மையை அறிந்து செய்தி வழங்குவதில் உறுதியாக உள்ளது. இது மலையாள செய்தி ஊடகத்துறைக்கு வழிகாட்டுவதாக இருக்கிறது. புதுமையான உள்ளடக்கம், ஆதாரபூர்வமான தகவல்கள் மற்றும் சமூகப் பொறுப்புள்ள செய்திகள் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஊடகத் துறையில் ஏசியாநெட் நியூஸ் தொடர்ந்து பயணிக்கிறது.
30 வருடத்துக்குப் பின் உங்கள் சேமிப்புக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும்? கணக்கிடுவது எப்படி?