Asianet News TamilAsianet News Tamil

இனி 200 யூனிட் வரை இலவச மின்சாரம்... 400 யூனிட் வரை பாதி கட்டணம்... முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

கடந்த 5 ஆண்டுகளாக மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்பட்டவில்லை என்று தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். 

arvind kejriwal says Free electricity up to 200 units
Author
Delhi, First Published Aug 1, 2019, 6:20 PM IST

கடந்த 5 ஆண்டுகளாக மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்பட்டவில்லை என்று தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். 

arvind kejriwal says Free electricity up to 200 units
இது குறித்து அவர் கூறுகையில், ‘’இன்று முதல் தலைநகர் டெல்லியில் 200 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, கட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறியுள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அதேபோல 201 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இன்று முதல் இந்தியாவிலேயே மிகவும் மலிவான மின்சாரம் டெல்லியில்தான் கிடைக்கும். மிகவும் வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவால், எளிய மக்கள் பயனடைவார்கள்.

arvind kejriwal says Free electricity up to 200 units

 இன்று முதல் 200 யூனிட்டுக்குக் கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது. வி.ஐ.பி-க்களுக்கும் பெரிய அரசியல்வாதிகளுக்கும் இலவச மின்சாரம் கிடைத்தால் அது குறித்து யாரும் எதுவும் சொல்வதில்லை. இந்த முடிவு தவறானதா? இந்த முடிவின் மூலம் டெல்லியில் இருக்கும் 33 சதவிகிதம் மக்கள் பயனடைவார்கள். குளிர்காலத்தின்போது 70 சதவிகித மக்கள் 200 யூனிட்டுக்கும் குறைவாகத்தான் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார். arvind kejriwal says Free electricity up to 200 units

டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்பட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த முடிவின் மூலம் டெல்லியில் இருக்கும் 33 சதவிகிதம் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios