Asianet News TamilAsianet News Tamil

Zomato ஊழியரை செருப்பால் தாக்கி ஆணவம்.. இயலாமையில் கைக்கட்டி நின்ற டெலிவரி பாய்.. வைரல் வீடியோ.

உணவு டெலிவரி செய்த  Zomato ஊழியரை  பெண் ஒருவர் காணொளியால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அங்கிருந்த ஒருவர் இந்த அட்டூழியத்தை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ள நிலையில் பலரும் அந்தப் பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 
 

 Arrogant attack on Zomato employee with sandal.. Delivery boy standing pathetically in disability.. Viral video.
Author
Bengaluru, First Published Aug 24, 2022, 1:20 PM IST

உணவு டெலிவரி செய்த  Zomato ஊழியரை  பெண் ஒருவர் காணொளியால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அங்கிருந்த ஒருவர் இந்த அட்டூழியத்தை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ள நிலையில் பலரும் அந்தப் பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Zomato,swiggy நிறுவனங்களின் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களால் அடித்து அவமானப்படுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது, இந்த வரிசையில் உணவு டெலிவரி செய்த Zomato ஊழியரை பொது இடத்தில் வைத்து ஒரு பெண் தனது ஷூவை கழட்டி சரமாரியாக அடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது, கடந்த ஆகஸ்டு 14ஆம் தேதி DJ என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் அது தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 Arrogant attack on Zomato employee with sandal.. Delivery boy standing pathetically in disability.. Viral video.

இதையும் படியுங்கள்:  சொந்த கட்சியில் அதிகார மோதல்...! கையாலாகாத தனத்தை திசை திருப்ப திமுக மீது குற்றச்சாட்டு- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

அந்த வீடியோவில்  Zomato ஊழியர் ஒருவர் பொது இடத்தில் வைத்து ஒரு பெண்ணால் கடுமையாக தாக்கப்படுகிறார், காலில் இருந்த ஷூவை கழட்டி இரண்டு முறை  அந்த பெண் அந்த டெலிவரி பாயை தாக்குகிறார், பின்னர் அதை காலில் அணிந்து கொண்டு தன்னுடன் வந்த தோழியுடன் புறப்படுவது போன்று அந்த காட்சி அமைந்துள்ளது, அந்தப் பெண் Zomato ஊழியரை தாக்கும்போது கூட அந்த ஊழியர் கைதட்டி, தலைகுனிந்தபடி, எதுவும் பேசாத வராய் மௌனமாக நிற்கிறார். இந்த காட்சியை காண்போர் பலரும் அந்த ஊழியரின் பரிதாப நிலையை கண்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  kerala judge: அரைகுறை ஆடை பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமில்லை: சர்ச்சைத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இடமாற்றம்

ஆனால் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆடியோ தெளிவாக இல்லை, ஆனால் இந்த சம்பவம் பெங்களூரில் நடந்திருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வீடியோவை  பகிர்ந்த DJ அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விவரித்துள்ளார்.  நான் ஆர்டர் செய்த உணவை  வாங்குவதற்காக அங்கு வந்தேன், அப்போது அங்கு  2 பெண்கள் வந்தனர், அவர்கள் அவர்களின் உணவை வாங்கிக் கொண்டது மட்டுமல்லாமல், டெலிவரி பாயை சரமாரியாக வசைபாடிறர் பின்னர்  தன் காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அந்த பெண் டெலிவரி பாயை தாக்கினர்.

 Arrogant attack on Zomato employee with sandal.. Delivery boy standing pathetically in disability.. Viral video.

அதை நல்லவேளையாக அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர், அதாவது டெலிவரி செய்ய வந்த  டெலிவரி பாய் வேறு ஒருவருடைய உணவை அந்தப் பெண்ணின் மாற்றி கொடுத்ததாகவும் அதற்கு அவர் பணம் கேட்டு தாகவும் கூறப்படுகிறது, இதனால் அந்த பெண் தாக்கியதாக கூறப்படுகிறது என அவர்தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்ததற்காக   Zomato நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. 

வீடியோவை வெளியிட்ட  DJ தொடர்பு கொண்ட அந்த  நிறுவனம் அவரது ஆர்டர் குறித்து கேட்டது, அதற்கு அவர்  எனது ஆர்டர்  குறித்து எனக்கு கவலையில்லை, ஆனால் டெலிவரி பாயை ஒரு பெண் பொது இடத்தில் வைத்து தகாத முறையில் தாக்கி இருக்கிறார் முதலில் அதற்கு நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தி உள்ளார். பொது இடத்தில் வைத்து  Zomato ஊழியரை தாக்கிய அந்த பெண்ணுக்கு சமூகவலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் தற்போது அந்த வீடியோ DJ வின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios