500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் அச்சகத்தில் 50 லட்சம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் நவம்பர் 16ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் சிரமத்தை போக்குவதற்காக 500 ரூபாய் நோட்டுகள் தங்குதடையின்றி கிடைப்பதற்காக அதிக அளவில் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.