ரூபாய் நோட்டுகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போதும், தங்கம் - வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொண்டு செல்லும்போது துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்களுடன் கொண்டு செல்வது வழக்கம்.

ஆனால், தக்காளி விலை உயர்வு காரணமாக அதனை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என எண்ணியதை அடுத்து தக்காளி வியபாரிகளின் கோரிக்கை அடுத்து, ஆயிதம் தாங்கிய பாதுகாவலர்களுடன், சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி உற்பத்தி அதிகரிப்பு காரணமாக, ஒரு ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது. 

இதனால், அதிருப்தி அடைந்த விவசாயிகள், தக்காளியை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர். ஆனால், தற்போதுள்ள நிலையில், தக்காளி மிக விலை உயர்ந்த இடதைப் பிடித்துள்ளது. 

தக்காளி பற்றாக்குறை காரணமாக ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி விலை உயர்வை அடுத்து, சில தினங்களுக்கு முன்பு மும்பையில் 2 ஆயிரத்து 600 கிலோ தக்காளியை ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கொள்ளையடிக்கப்பட்டது. 

100 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளியை பாதுகாப்புடன் கொண்டு செல்ல போபால் வியாபாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம், பாதுகாப்பு கோரியுள்ளனர். 

இவர்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம், தக்காளியை கொண்டுசெல்ல ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களை அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இந்தூர் சந்தையில் தக்காளி விற்பனையின்போதும் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.