Asianet News TamilAsianet News Tamil

செங்கல்பட்டில் இன்று பெகட்ரான் டெக்னாலஜியின் மொபைல் தயாரிப்பு தொழிற்சாலை திறப்பு; அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

செங்கல்பட்டில் இன்று பெகட்ரான் டெக்னாலஜியின் மொபைல் தயாரிப்பு தொழிற்சாலை திறக்கப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சிறப்பு கவுரவ விருந்தினராக கலந்து கொள்கிறார். 
 

Apple Vendor Pegatrons mobile Facility In Chennai; IT minister Rajeev Chandrasekhar participating
Author
First Published Sep 30, 2022, 9:23 AM IST

சென்னையில் ஆப்பிள் விற்பனையாளர் பெகட்ரான் டெக்னாலஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை இன்று செங்கல்பட்டில் திறக்கப்படுகிறது. மகேந்திரா வேல்ர்டு சிட்டியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த நிறுவனத்தை திறந்து  வைக்கிறார். இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சிறப்பு கவுரவ விருந்தினராக பங்கேற்கிறார். 

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையில், ''ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரானுக்குப் பிறகு இந்தியாவில் தைவான் நாட்டின் ஆப்பிள் விற்பனையாளர் தங்களது மூன்றாவது தொழிற்சாலையை இன்று திறக்கின்றனர். சென்னை அருகே செங்கல்பட்டில் உள்ள தொழில் பூங்காவில், மத்திய அரசின் பிரபலமான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் (பிஎல்ஐ) கீழ் பெகட்ரானின் புதிய மொபைல் போன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த விழாவில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கவுரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

பெகட்ரான் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக ஐபோன் உற்பத்தி சோதனையை நடத்தி வருகிறது. சுமார் ரூ. 1,000 கோடி முதலீடு செய்யவும், மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான மொபைல் போன்களை இந்தியாவில் தயாரிக்கவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

sanskrit: nirmala sitharaman:'தமிழகத்தில் சமஸ்கிருதம் கற்பதை ஊக்கப்படுத்துவதில்லை': நிர்மலா சீதாராமன் வேதனை

மேலும் அந்த அறிக்கையில், "பெகட்ரானின் இந்தியாவின் துணை நிறுவனமான பெகட்ரான் இந்தியா, இந்த வசதியை செயல்படுத்தி வருகிறது. இத்திட்ட காலத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான முதலீட்டைச் செய்துள்ளது.  மேலும், இந்தத் துறையில் ஆயிரக்கணக்கான நேரடி வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மொபைல் போன்களை உற்பத்தி செய்து, அசெம்பிள் செய்து தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2014-15ஆம் ஆண்டில் மொபைல் போன் உற்பத்தி ரூ. 18,900 கோடியாக சரிந்தது. மொபைல் போன் உற்பத்தி, தற்போது 14 மடங்கு அதிகரித்து ரூ. 2,75,000 கோடியாக உயர்ந்துள்ளது, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் (பிஎல்ஐ) முதல் ஆண்டிலேயே 28 சதவீதம் உயர்ந்து ரூ. 60,000 கோடி அளவிற்கு உற்பத்தி அதிகரித்துள்ளது. 

2015-16ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து மொபைல் போன் ஏற்றுமதி பூஜ்ஜியத்தை நெருங்கி இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "பிஎம்பி (கட்டம் கட்டமாக  உற்பத்தித் திட்டம்) மற்றும் பிஎல்ஐ திட்டங்களால் மொபைல் போன் உற்பத்தி 2019-20ல் ரூ. 27,000 கோடியை எட்டியது. மேலும் பிஎல்ஐ திட்டத்தின் முதல் ஆண்டில் 66 சதவீதம் அதிகரித்து ரூ. 45,000 கோடியாக இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியுடன்  ஒப்பிடுகையில் ஏப்ரல்-ஆகஸ்ட் முதல் 5 மாதங்களில் மொபைல் ஏற்றுமதி 140 சதவீதம் உயர்ந்து ரூ. 10,300 கோடியிலிருந்து ரூ. 25,000 கோடியாக உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

rbi:reporate: பாக்கெட் பத்திரம்! இஎம்ஐ அதிகரிக்கும்! ரெப்போ ரேட் 50 புள்ளிகள் வரை ஆர்பிஐ உயர்த்த வாய்ப்பு

பெகட்ரானைத் தவிர, பாக்ஸ்கான் ஹான் ஹய் டெக்னாலஜி இந்தியா மெகா டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட், டெல், அஸ்சென்ட் சர்கியூட்ஸ் மற்றும் பாரத் எப்டிஹெச் ஆகியவையும்  பிஎல்ஐ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான முதலீடுகளைச் செய்து, உலக நாடுகளில் இந்தியாவின் உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்துள்ளன.

"செங்கல்பட்டில் உள்ள புதிய பெகட்ரான் வசதி, இந்தியாவின் உற்பத்தியில் 20 சதவீதத்துடன், எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் உற்பத்தியில் முக்கிய மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தமிழக மக்களின் திறன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிலும் இனி வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios