Asianet News TamilAsianet News Tamil

rbi:reporate: பாக்கெட் பத்திரம்! இஎம்ஐ அதிகரிக்கும்! ரெப்போ ரேட் 50 புள்ளிகள் வரை ஆர்பிஐ உயர்த்த வாய்ப்பு

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு உயர்த்தினால் தொடர்ந்து 3வது முறையாக 50 புள்ளிகள் உயர்த்தப்படும்.

For the third time in a row, the RBI will increase the repo rate by 50 basis points.
Author
First Published Sep 29, 2022, 11:19 AM IST

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு உயர்த்தினால் தொடர்ந்து 3வது முறையாக 50 புள்ளிகள் உயர்த்தப்படும்.

நாட்டில் பணவீக்கம் 8 சதவீதத்தை எட்டியதையடுத்து, கடந்த இரு நிதிக்கொள்கைக் கூட்டங்களிலும் ரெப்போ ரேட் வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. இதனால் பணவீக்கம் குறைந்து 7 சதவீதத்துக்கும் கீழ் வந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்து மீண்டும் 7 சதவீதத்தை எட்டியது. 

For the third time in a row, the RBI will increase the repo rate by 50 basis points.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் 3வது நிதிக்கொள்கைக் கூட்டம் நேற்று தொடங்கியுள்ள நாளை கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவிக்க உள்ளார்.

நாட்டில் பணவீக்கம் 7 சதவீதத்துக்கும் குறையாமல் இருப்பதால், ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தத்தில் ரிசர்வ் வங்கி இருக்கிறது. ரிசர்வ் வங்கி பணவீக்கத்தின் கட்டுப்பாடு அளவை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு வைத்துள்ளது. ஆனால், 7 சதவீதத்தையும் தாண்டி இருப்பதால் ரெப்போ ரேட் வீதம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது

ப்ளூம்பெர்க் பொருளாதார வல்லுநர்களில் 35 பேரில் 24 பேரின் கணிப்பின்படி, ரெப்போ ரேட் வீதம் 50 புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டு வட்டிவீதம் 5.90 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று தெரிவித்துள்ளனர். 10 பொருளாதார வல்லுநர்கள் ரெப்போ ரேட் வீதம் 35 புள்ளிகள் உயர்ந்து வட்டிவீதம் 5.75 சதவீதம் வரை உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 1 முதல் ரயிலில் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் உயர்கிறது: காரணம் என்ன?

For the third time in a row, the RBI will increase the repo rate by 50 basis points.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி வட்டிவீதத்தை 3வது முறையாக உயர்த்தியுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு வலுவடைந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறுகாணாத அளவு சரிந்தது. இது பணவீக்கத்தையும், பணத்துக்கான மதிப்பையும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கியது.

இது குறித்து கோடக் மகிந்திரா வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் உபாசனா பரத்வாஜ் கூறுகையில் “ மிகப்பெரிய கவலைக்குறைய அம்சம் என்னவென்றால் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு மோசமாக சரிந்துள்ளதுதான். இதனால் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்போதுதான் ரூபாய் மதிப்பை மேலும் சரியாமல் பாதுகாக்க முடியும்” எனத் தெரிவித்தார்

இலவச உணவுதானியம் வழங்கும் PMGKAY திட்டம் டிசம்பர் வரை நீட்டிப்பு: ரூ.45 ஆயிரம் கோடி செலவு

For the third time in a row, the RBI will increase the repo rate by 50 basis points.

நாளை வெளியாகும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை முடிவில் கவர்னர் சக்தி காந்ததாஸ், “ நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவையும் குறைக்கக்கூடும். பணவீக்கம்கட்டுக்குள் வராமல் இருப்பதால், நடப்புநிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் என்று கணித்திருந்தநிலையில், அது 6.7சதவீதமாகக் குறைக்கலாம். பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துவருவது, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாகும்”

தங்கம் விலை கிடுகிடு உயர்வு!சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரிப்பு: வெள்ளி விர்ர்! நிலவரம் என்ன?

கடனுக்கான வட்டிவீதம் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டால் வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்கியோர் மாதம் செலுத்தும் இஎம்ஐ அளவு அதிகரிக்கும். மாத ஊதியம் பெறுவோர் இஎம்ஐ செலுத்துபவர்களாக இருந்தால், அவர்களின் பாக்கெட்டிலிருந்து அதிகமாக பணம் வெளியேறும்

Follow Us:
Download App:
  • android
  • ios