gold rate today:தங்கம் விலை கிடுகிடு உயர்வு!சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரிப்பு: வெள்ளி விர்ர்! நிலவரம் என்ன?
தங்கம் விலை இன்று 2வது நாளாக அதிகரி்த்துள்ளது. ஒரேநாளில் சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரித்துள்ளது
தங்கம் விலை இன்று 2வது நாளாக அதிகரி்த்துள்ளது. ஒரேநாளில் சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரித்துள்ளது
தங்கம் விலை இன்று கிராமுக்கு 55ரூபாயும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,625 ஆகவும், சவரன், ரூ.37,000 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 55ரூபாய் அதிகரித்து, ரூ.4,680ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 ஏற்றம் கண்டு, ரூ.37,440ஆக அதிகரித்துள்ளது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,680ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த வாரத்தில் சரிவை நோக்கியே பெரும்பாலான நாட்கள் நகர்ந்தது. இந்த வாரத்தில் தொடக்கத்தில்ருந்து தங்கம் விலை சரிந்தநிலையில் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்தது.
கோலொகேஷன் ஊழல்: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆனால், நேற்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்தது. இன்று யாரும் கணிக்க முடியாத வகையில் கிராமுக்கு 55 ரூபாயும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நாளுக்குநாள் கணிக்க முடியாத நிலையில் செல்கிறது. தங்கம் விலை இருநாட்கள் சரிந்தநிலையில் மேலும்விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கு மேல் உயர்ந்துள்ளது.
இலவச உணவுதானியம் வழங்கும் PMGKAY திட்டம் டிசம்பர் வரை நீட்டிப்பு: ரூ.45 ஆயிரம் கோடி செலவு
இந்த விலை உயர்வு, நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்துவரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா, அதிகரிக்குமா என்ற குழப்பத்துடனும், தயக்கத்துடனும் நகை வாங்குகிறார்கள்.
அக்டோபர் 1 முதல் ரயிலில் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் உயர்கிறது: காரணம் என்ன?
வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 1.50 காசு உயர்ந்து, ரூ.61.50ஆகவும், கிலோவுக்கு ரூ.1500 சரிந்து, ரூ.61,500 ஆகவும் விற்கப்படுகிறது
- 22 carat gold rate in chennai today
- 22 carat gold rate today
- 22k gold price today
- 22k gold rate
- Chennai gold rate
- Gold rate today
- gold price
- gold price live
- gold price today
- gold rate
- gold rate in Chennai
- gold rate today
- gold rate today in Chennai
- gold today Chennai
- silver price
- silver price today
- silver rate
- silver rate today
- today gold price rate
- today gold rate 8 gram
- today gold rate in Chennai
- today gold rate in tamilnadu