NSE co-location Case: கோலொகேஷன் ஊழல்: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

கோ-லொகேஷன் ஊழல் வழக்கில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்மா, அவரின் உதவியாளர் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

NSE co-location case.: Chitra Ramkrishna and Anand Subramanian are granted bail by the Delhi HC

பிஎப்ஐக்கு தடை: 2 ஆண்டுக்கு முன்பே சொன்னேன்! அஜ்மீர் தர்ஹா தலைவர் வரவேற்பு

த்ரா ராம்கிருஷ்ணன் என்எஸ்இ சிஇஓவாக 2013 முதல் 2016ம் ஆண்டுவரை  இருந்த காலத்தில் கோ-லொகேஷன் ஊழல் நடந்தது. அதாவது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே சில குறிப்பிட்ட பங்கு தரகர்களின் சர்வர்கள் வைக்கப்பட்டு, பங்குபரிவர்த்தனை தகவல்கள் விரைவாகப் பகிரப்பட்டு, ஆதாயம் அடைந்ததாக புகார் எழுந்தது. 

NSE co-location case.: Chitra Ramkrishna and Anand Subramanian are granted bail by the Delhi HC

இந்த கோலொகேஷன் ஊழல் வழக்குத் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சித்ரா ராம்கிருஷ்ணனை மார்ச் 6ம் தேதியும், ஆனந்த் சுப்பிரமணியனை பிப்ரவரி 24ம் தேதியும் கைது செய்தனர்.  இருவரும் இருமுறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு எதிர்ப்புத் தெரிவித்ததால் சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்யுங்க ! கேரள காங்கிரஸ் எம்.பி. கொந்தளிப்பு

இந்நிலையில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

NSE co-location case.: Chitra Ramkrishna and Anand Subramanian are granted bail by the Delhi HC

சித்ரா தரப்பில் வழக்கறிஞர் என் ஹரிஹரனும், ஆனந்த் சுப்பிரமணியம் தரப்பில் வழக்கறிஞர் விகால் பாவாவும் ஆஜராகினர். இன்னும ஜாமீன் உத்தரவு குறித்த முழுமையான அறிக்கை வெளியாகவில்லை. 
 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios