Asianet News TamilAsianet News Tamil

செல்போன் ஒட்டுகேட்பு சர்ச்சை: ஜார்ஜ் சொரொஸ் தொடர்பு பற்றி கேள்வி எழுப்பும் சஞ்சீவ் சன்யால்!

செல்போன் ஒட்டுகேட்பு சர்ச்சை தொடர்பாக ஜார்ஜ் சொரொஸ் தொடர்பு பற்றி சஞ்சீவ் சன்யால் கேள்வி எழுப்பியுள்ளார்

Apple hacking alert Controversy Sanjeev Sanyal claims george soros link smp
Author
First Published Nov 1, 2023, 1:01 PM IST | Last Updated Nov 1, 2023, 1:01 PM IST

காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி, மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலருக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அரசு ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்கள் உங்கள் சாதனத்தை குறிவைக்கலாம்; உங்களது செல்பேசி தகவல்கள் திருடப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில் உள்ள மூன்று பேருக்கும் இதுபோன்ற எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, அதானியை தொட்டவுடன் இது நடக்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அந்த செய்திகளை பெற்றவர்களையும், ஆப்பிள் நிறுவனத்தையும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆப்பிள் நிறுவனம், “அச்சுறுத்தல் நுண்ணறிவு சமிக்ஞைகளின் அடிப்படையில் 150 நாடுகளில் அதுபோன்ற அறிவிப்புகள் சென்றுள்ளன. அவை பெரும்பாலும் முழுமையற்றவை. சில சமயங்களில் ஐபோன் ஹேக் தொடர்பான செய்திகள் தவறான எச்சரிக்கைகளாக இருக்கலாம். இந்திய அரசு ஆதரவு நிறுவனம் முயற்சி என குறிப்பிட்டு கூறவில்லை.” என தெரிவித்துள்ளது.

முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாக 2019ஆம் ஆண்டில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தற்போதைய ஆப்பிள் சர்ச்சை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

 

இந்த நிலையில், செல்போன் ஒட்டுகேட்பு சர்ச்சை தொடர்பாக கோடீஸ்வர முதலீட்டாளர் ஜார்ஜ் சொரொஸ் தொடர்பு பற்றி எழுத்தாளரும், பொருளாதார நிபுணருமான சஞ்சீவ் சன்யால் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சில முக்கிய ஆப்பிள் பயனர்களால் பெறப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் செய்திகள் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து வராமல், அக்சஸ் நவ் எனப்படும் ஜார்ஜ் சொரொஸ் தொடர்புடைய என்ஜிஓவிடமிருந்து வந்தவை. இந்த வெளிப்புற ஏஜென்சியால் எப்படி இது போன்ற உண்மையான செய்திகளை கணினி மூலம் அனுப்ப முடிகிறது என்பது, உண்மையில் மிகவும் ஆர்வமாக உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார். 

மனிதநேயத்தை வெறுப்பவர் ஜார்ஜ் சொரோஸ்: எலான் மஸ்க் காட்டம்!

தான் தொழில்நுட்ப வல்லுநர் இல்லை என தெரிவித்துள்ள அவர், அநேகமாக இது ஒரு தொழில்நுட்ப ஹேக் அல்ல. ஆனால் ஆப்பிளின் நிறுவனத்தில் நடந்துள்ள ஹேக். அவர்களின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது என்றும் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் ஆகியவற்றின் உரிமையாளருமான எலான் மஸ்க், கோடீஸ்வர முதலீட்டாளரும், சமூக சேவகருமான ஜார்ஜ் சொரோஸை மனிதநேயத்தை வெறுப்பவர் என சாடியிருந்தார்.

ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், ஜனநாயகக் கட்சிக்கு அதிகமாக நிதி அளிப்பதில் முதலிடத்தில் இருக்கும் ஜார்ஜ் சொரோஸ் மற்ற நாட்டு விஷயங்களிலும் தலையிடுவதாக விமர்சித்திருந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios