2018ம் ஆண்டுக்கான பெருமை மிகு பத்ம விருதுகளுக்கு யாரை வேண்டுமானாலும், யாரும் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் பரிந்துரைக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த பரிந்துரைகள் அல்லது விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்-லைன் மூலமாகwww.padmaawards.gov.in என்ற மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கட்டுப்பட்ட இணையதள முகவரியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

கலை, அறிவியல், இலக்கியம், நாடகம், சமூகசேவை, பொறியியல், பொதுவிவகாரம், வர்த்தகம், மருத்துவம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு மதிப்பு மிக்க பத்ம விருதுகள் ஆண்டுதோறும் மத்தியஅரசால் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த பத்ம விருதுகளுக்கு ஒருவரை பரிந்துரைக்க இதற்கு முன் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. மேலும், மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், முதல்வர், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், பார ரத்னா, பத்மவிபூஷன் விருது பெற்றவர்கள் மட்டுமே பரிந்துரை செய்ய முடியும்.

இந்நிலையில், இந்த நிலையை மாற்றி, இனிமேல், பொதுமக்ககளும் பத்ம விருதுகளுக்கு தங்களின் ‘ஹீரோக்களை’ பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் அறிவித்தார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

பத்ம விருதுகளுக்கு ஒருவரை பரிந்துரைக்க செப்டம்பர் 15, 2017 கடைசி நாளாகும். இந்த விருதுகளுக்கு யாரை வேண்டுமானாலும், யாரும் பரிந்துரை செய்யலாம். இதுநாள் வரை நாட்டுக்கு அறியப்படாத ஹீரோக்களை, மக்கள் இந்த பெருமை மிகு விருதுக்கு பரிந்துரைக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.