காங்கிரஸ் போராட்டத்தில் முதல் ஆளாக வந்த ஜெகதீஷ் டைட்லர்: நெட்டிசன்கள் விமர்சனம்
காங்கிரஸ் கட்சியின் சங்கல்ப் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஜெகதீஷ் டைட்லர் பங்கேற்றதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று சங்கல்ப் சத்தியாகிரகம் என்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இதில் முதல் ஆளாக ஜெகதீஷ் டைட்லர் பங்கேற்றது சமூக வலைதளங்களில் சர்ச்சை ஆகியுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் தீட்சா முகாமுக்கு ஜெகதீஷ் டைட்லர் முன்னதாகவே சென்றடைந்தார். 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது டெல்லியில் வசித்த சீக்கிய சமூகத்துக்கு எதிராக கொலைவெறி கும்பலை ஏவியதற்கும் காரணமானவர் என்று ஜெகதீஷ் டைட்லர் குற்றம் சாட்டப்பட்டார்.
டெல்லியில் தடையை மீறி காங். சத்தியாகிரகப் போராட்டம்: கார்கே, பிரியங்கா பங்கேற்பு
இவர் காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்றது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் சத்தியாகிரகத்தில் காந்திஜியைப் போல் அமர்ந்திருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். அங்கூர் சிங் என்ற நெட்டிசன் காந்திஜியின் புகைப்படம் மற்றும் தலைப்புகளை அருகருகே வைத்து ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் ஓபிசி மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கட்சி என்று நெட்டிசன் விமர்சிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி நடத்திய சத்தியாக்கிரகம் ஓபிசி மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளை ஆதரிக்கிறதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். ஜெகதீஷ் டைட்லருக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் முக்கிய இடம் வழங்கிவருவதாக நெட்டிசன் விமர்சித்துள்ளனர்.
ISRO: 36 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் எல்விஎம் 3 ராக்கெட்