ஓடிடி தளங்களில் இனி இவை கட்டாயம்... மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

ஓடிடி தளங்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

anti alcohol and anti tobacco slogans must be on ott sites says central govt

ஓடிடி தளங்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்மைகாலங்களாக திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை திரைத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியோடு திரைப்படங்களில் இருப்பது போன்று, இதற்கு தணிக்கை இல்லாததால் வெட்டுதல் ஒட்டுதல் போன்ற செயல்கள் இதில் இருக்காது. இதனால் ஓடிடியில் வெளியாகும் படங்களில் ஆபாசக் காட்சிகள், மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெறும்.

இதையும் படிங்க: பாகிஸ்தான், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கள்ளநோட்டுகள்!

இந்த நிலையில், ஓடிடி தளங்களில் புகையிலை எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்வது பற்றி மத்திய சுகாதாரத்துறை, தகவல் மற்றும் ஒலிப்பரத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தியது. இதை அடுத்து ஓடிடி தளத்தில் இனி வெளியாகும் படங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருள்கள் வரும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை  மீறும் படக்குழு மீது மத்திய சுகாதாரம் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்றத்தில் உள்ள அகண்ட பாரத வரைபடத்திற்கு நேபாள நாட்டில் வலுக்கும் எதிர்ப்பு!! என்ன காரணம் தெரியுமா

திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், தொடக்கத்திலும் நடுவிலும் குறைந்தபட்சம் முப்பது வினாடிகள் நீடிக்கும் வகையில், புகையிலை எதிர்ப்பு வாசகங்கள், சுகாதார இடத்தைக் காண்பிக்க வேண்டும் என்றும், புகையிலை பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் போது அல்லது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவற்றின் பயன்பாட்டின் போது, திரையின் அடிப்பகுதியில் ஒரு முக்கிய நிலையான செய்தியாக புகையிலை எதிர்ப்பு சுகாதார எச்சரிக்கையை அவர்கள் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் பின்பற்றும் விதிகள் ஓடிடி இயங்குதளங்களுக்கும், வரைவு அறிவிப்பின் படியும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios