முன்னாள் முதல்வர் சித்தராமையா கொடுத்த இழப்பீட்டுத் தொகையை பெண் ஒருவர் வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் சித்தராமையா கொடுத்த இழப்பீட்டுத் தொகையை பெண் ஒருவர் வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கெரூர் நகரில் வகுப்புவாத மோதல் நடைபெற்றது. இதில் பலர் காயமடைந்தனர். இதை அடுத்து காயமடைந்தவர்கள் ஆசிர்வாட் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆசிர்வாட் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த ஹனிப், ராஜேசாப், ரபீக், தவால் மாலிக் ஆகியோரிடம் நலம் விசாரித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். அப்போது கலவரத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு கொடுத்த பணத்தை சித்தராமையாவிடம் திருப்பிக் கொடுத்தனர்.
இதையும் படிங்க: டிஜிட்டல் ஊடகங்களுக்கும் கடிவாளம்: மத்திய அரசு சுறுசுறுப்பு

பின்னர் அங்கிருந்து சித்தராமையா புறப்படும் போது முஸ்லீம் பெண் ஒருவர், சித்தராமையா வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பணத்தை வைத்துக்கொண்டு வாகனத்தின் பின்னால் சென்று, பணத்தை போலீஸ் பாதுகாப்பு வாகனத்தின் மீது வீசி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும் அந்த பெண், தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்க வருகிறார்கள். பிறகு எந்த பிரச்சனையிலும் கவனம் செலுத்துவதில்லை. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும், காரணமே இல்லாமல் நாங்கள் தாக்கப்பட்டுள்ளோம் என்று அந்த முஸ்லிம் பெண் ஆவேசமாகத் தெரிவித்தார். சித்தராமையா அவர்களை ஆறுதல்படுத்த முயன்றதாகவும், காயமடைந்த 4 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.50,000 கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அவரது கான்வாய் நகரத் தொடங்கிய பிறகு, ஒரு பெண் "ரொக்க பேடா" (பணம் வேண்டாம்) என்று கூறி பணத்தை அவரது வாகனத்தின் மீது வீசினார்.
இதையும் படிங்க: மெட்ரோ ரயிலில் இளைஞனுக்கு ‘தர்ம அடி’ போட்ட இளம்பெண்..வைரல் வீடியோ - எதற்கு தெரியுமா ?
காவல்துறையின் கூற்றுப்படி, ஜூலை 6 ஆம் தேதி, இந்து ஜாகரனா வேதிகே என்று நம்பப்படும் வலதுசாரி அமைப்பின் தொழிலாளர்கள், யாசின் என அடையாளம் காணப்பட்ட ஒரு முஸ்லீம் இளைஞரை எதிர்கொண்டு, இந்து சிறுமிகளை கிண்டல் செய்ததாக குற்றம் சாட்டியதில் இருந்து பிரச்சினை தொடங்கியது. இது காரசாரமான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது, பின்னர், யாசின் மேலும் பலரை தன்னுடன் அழைத்து வந்து, தன்னை எதிர்கொண்டவர்களை தாக்கினார். இது இந்து அமைப்பினரை பதிலடி கொடுக்க தூண்டியது. ஒட்டுமொத்தமாக, மோதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தடுக்க, அதிகாரிகள் ஒரு நாளைக்கு 144 தடையை விதித்து, நகரத்தில் பெரிய கூட்டங்களுக்கு தடை விதித்தனர். இந்து மற்றும் முஸ்லீம் ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
