நேற்றிரவு ஆந்திராவில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது, 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் மற்றொரு ரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40-க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
08532 விசாகப்பட்டினம்-பலாசா பாசஞ்சர், 08504 விசாகப்பட்டினம்-ராயகடா பாசஞ்சர் ஆகிய ரயில்கள் மோதிக் கொண்டதாக ரயில்வே மண்டல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்ற பயணிகள் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கண்டகப்பளி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், 5 பெட்டிகள் தடம் புரண்டன. இதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடங்கிய நிலையில், பயணிகளை நகர்த்த விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு ரயில் அனுப்பப்பட்டது.
ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விசாகப்பட்டினம் மற்றும் அனகாபள்ளி ஆகிய மாவட்டங்களில் இருந்து முடிந்தவரை ஆம்புலன்ஸ்களை அனுப்பவும், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டார்.
சுகாதாரம், காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட பிற அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து, விரைவான நிவாரண நடவடிக்கைகளை எடுக்கவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனிடையே ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பேசினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றுன், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
மனிதப்பிழையின்விளைவாகஇந்த விப்பத்து ஏற்பட்டதாகரயில்வேவட்டாரங்கள்தெரிவித்தன, ரயில் ஓட்டுநர் சிக்னலைகவனிக்கவில்லைஎன்றுஅதிகாரிகள் கூறியுள்ளனர். ரயில்வேஅமைச்சகத்தின்போர்அறைநிலைமையைகண்காணித்துவருவதாகரயில்வேவட்டாரங்கள்மேலும்தெரிவித்தன.
இந்த விபத்து குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது விபத்துநடந்தஇடத்துக்குமீட்புக்குழுக்கள்அனுப்பப்பட்டுள்ளதாகவும், கல்விஅமைச்சர்பி.சத்தியநாராயணா, மாவட்டஆட்சியர்மற்றும்எஸ்பிஆகியோர்நிவாரணம்மற்றும்மீட்புப்பணிகளைமேற்பார்வையிட்டுவருவதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி அவரிடம்தெரிவித்தார். மேலும்காயமடைந்தவர்களுக்குசிகிச்சைஅளிக்கஅருகிலுள்ளமருத்துவமனைகளில்அனைத்துஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளதாகமத்தியஅமைச்சரிடம்அவர்மேலும்தெரிவித்தார்.
இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பான அவசர உதவி எண்ணை கிழக்கு கடற்கரை ரயில்வே வெளியிட்டுள்ளது. புவனேஸ்வர் - 0674-2301625, 2301525, 2303069 வால்டேர் - 0891- 2885914.
இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின் “ கடந்த ஜூன் மாதம் சோகமான பாலசோர் ரயில் விபத்து நடந்த சில மாதங்களுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் ரயில் மோதியதால் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் பயணத்திற்காக ரயில்வேயை நம்பியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பது கவலையளிக்கிறது. மத்திய அரசும், ரயில்வேயும் அவசரமாக மறுமதிப்பீடு செய்து, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
