Watch: பற்றி எரிந்த ஸ்டேட் வங்கி ஏடிஎம்! தீயில் கருகி நாசமான ரூபாய் நோட்டுகள்!
ஆந்திராவின் நெல்லூரில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூபாய் நோட்டுகள் கருகி நாசமாகின.
ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சனிக்கிழமை ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லூரில் உள்ள வானம்தோப்பு பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பகல் நேரத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தீ விபத்து நேர்ந்திருப்பது பற்றிய தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைவில் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
நெல்லை ரயில் நிலையம் சாதனை! முதல் முறையாக ரூ.100 கோடிக்கு மேல் வருவாய்
ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மின்தடை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது எனவும் முழுமையான விசாரணைக்குப் பின்பே சேத விவரம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே அப்பகுதியில் இருந்தவர்கள் ஏடிஎம் மையத்தில் தீ பற்றி எரியும் காட்சியை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
என் சகோதரரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்! பிரதமருக்கு பிரியங்கா காந்தி அட்வைஸ்