அரசியலில் எதிரிகள்; ஆனா தங்கை மகன் நிச்சயதார்த்தத்திற்கு போகலன்னா எப்படி? ஓடிச் சென்ற ஆந்திர முதல்வர்!!

தனது சகோதரியும் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளாவின் மகனின் நிச்சயதார்த்த விழாவில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்டார்.

Andhra CM Jagan Mohan Reddy Attends Engagement Ceremony Of YS Sharmila's Son Rya

தனது சகோதரியும் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளாவின் மகனின் நிச்சயதார்த்த விழாவில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்டார்.காந்திபேட்டில் உள்ள கோல்கொண்டா ரிசார்ட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஜெகன் தனது தாய் விஜயம்மாவை கட்டித்தழுவியதுடன், ஷர்மிளாவையும் வாழ்த்தினார். ஜெகனுடன் அவரது மனைவி பாரதி ரெட்டியும் வந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஒய்.எஸ். ஷர்மிளாவின் மகன் ராஜா ரெட்டிக்கும், அட்லூரி பிரியாவுக்கும் நேற்று காந்திபேட்டையில் உள்ள கோல்கொண்டா ரிசார்ட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ராஜா ரெட்டியும் பிரியாவும் அமெரிக்காவில் முதுகலைப் படிப்பின் போது முதன்முறையாக சந்தித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். ராஜா ரெட்டி ஒரு முக்கிய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார், பிரியா நிதி ஆய்வாளராக பணிபுரிகிறார். தற்போது இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். 

உலகின் முதல் சைவ 7 நட்சத்திர ஹோட்டல்.. அதுவும் அயோத்தியில்.. உணவு பிரியர்களுக்கு செம விருந்து காத்திருக்கு!!

இந்த திருமணம் குறித்த அறிவிப்பை ஷர்மிளா தனது X வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அவரின் பதிவில் "அனைவருக்கும் 2024 ஆசீர்வதிக்கப்பட வாழ்த்துக்கள்! ஜனவரி 18 ஆம் தேதி அவரது காதலியான அட்லூரி ப்ரியாவுடன் என் மகன் ஒய்.எஸ். ராஜா ரெட்டியின் நிச்சயதார்த்தம் மற்றும் பிப்ரவரி 17, 2024 இல் அவர்களின் திருமணம் நடைபெறவிருக்கும் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஜனவரி 3 ஆம் தேதி புதுதில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் ஷர்மிளா அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் தனது YSR தெலுங்கானா கட்சியை (YSRTP) காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். ஜனவரி 16 ஆம் தேதி, ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். 

அயோத்தி கோயில் கருவறையில் நிறுவப்பட்ட ராமர் சிலை.. புகைப்படம் இதோ..

அரசியல் ரீதியாக ஜெகன் மோகனுக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தனது சகோதரி மகனின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டதன் மூலம் தங்கள் அண்ணன் தங்கை உறவில் எந்த விரிசலும் இல்லை என்பதை ஜெகன் மோகன் உறுதிப்படுத்தி உள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios