இந்தியாவின் டாப் பணக்காரரின் மகனாக இருந்தாலும், வயதுக்கு கூட மதிப்பு கொடுக்காமல் மமதையில் இருக்க கூடாது என, ஆனந்த் அம்பானியின் வீடியோ ஒன்றை வெளியிட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். 

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை நிர்வகித்து வரும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குனராக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 49.46% பங்கை கொண்டுள்ள இவர் உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தையும், இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு துறையின் உரிமையாளராகவும் உள்ளார். 

முகேஷ் அம்பானியின் இளைய சகோதரரான அனில் அம்பானியும் ரிலையன்ஸ் குழுமதின் மற்றொரு தலைவர் ஆவார். அம்பானி குடும்பம் இந்தியாவிலேயே மிகவும் பணக்கார குடும்பமாகும். மேலும் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளனர். முகேஷ் அம்பானியின் நிறுவனங்களை சிலவற்றை அவரின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, இளையமகன் ஆனந்த் அம்பானி மற்றும் மகள் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.

செக்சியான ரியாக்ஷனோடு... கட்டழகை காட்டி மூச்சு முட்ட வைத்த கீர்த்தி சுரேஷ்! பார்த்தாலே பற்றி கொள்ளும் ஹாட் போட

முகேஷ் அம்பானியின் பிள்ளைகள் பெரிதாக இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கியது இல்லை என்றே கூறலாம். ஆனால் தற்போது ஆனந்த் அம்பானியின் செயல் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஆனந்த் அம்பானி, தன்னை விட வயது அதிகமான ஒருவரை காலில் விழ வைத்து அவருக்கு வாழ்த்தியுள்ளார். எவ்வளவு தான் பணம் இருந்தாலும், தன்னை விட மூத்தவர்களை காலில் விழவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என நெட்டிசன்கள் இதுகுறித்த விடியோவை வெளியிட்டு, விளாசி வருகிறார்கள்.

துளியும் மேக்கப் இன்றி... சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி முத்தம்! கிக் ஏற்றும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

மேலும் ஆனந்த் அம்பானி அந்த நபருக்கு ஸ்பூன் மூலம் கேக் ஊட்டி விடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தான், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது 


Scroll to load tweet…