பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் தாக்குதல் நடந்தது. இதில் தொடர்புடையவர்களை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் ராஜசன்சி கிராமத்தில் மத வழிபாட்டின் போது வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் கமான்டர் ஜாகிர் முசா, ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 5 முதல் 6 பயங்கரவாதிகள் அமிர்தசரஸ் சென்று, 2 நாட்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இவர்கள் தாக்குதல் நடத்தியதற்கான காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை கைப்பற்றிய பஞ்சாப் போலீசார், அந்த காட்சிகளை வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமிர்தசரசில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும். காவல் உதவி உதவி எண் 181 ல் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.