நடிகை ஸ்ரீதேவி காலமானது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகும் முன்பாகவே, ஏதோ தப்பு நடக்கப் போகிறது என்றும் இது ஏன் என்று தெரியவில்லை என்றும் நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் சில நிமிடங்களுக்குப் பிறகு, நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. துபாயில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி (54) மரணமடைந்தார். தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி மற்றும் ரிஷிகபூர் என இந்திய சினிமாவில் பல
உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.

தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்துள்ளார். சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ்  நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்களுடனும் நடித்தவர். புகழின்
உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி. இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதில் இரருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி, 2012 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பின், தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அவருக்கு அங்கே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இரவு 11.30 மணியளவில் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மறைவுக்கு சில நிமிடங்கள் முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. நேற்றிரவு துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதேவியின் மறைவு செய்து, இந்திய நேரப்படி 3 மணியளவில்தான் ஊடகங்களில் வெளியானது. ஆனால் நேற்றிரவு 1.15 மணியளவில் நடிகர் அமிதாப் பச்சன், தனது டுவிட்டர் பக்கத்தில் ஏதோ தப்பா படுது; வித்தியாசமான பதட்டம் நிலவுகிறது. ஏனென்று தெரியவில்லை என்று பதிவிட்டிருந்தார். இப்படி பதிவிட்டு சில
நிமிடங்களிலேயே ஸ்ரீதேவியின் மறைவு செய்தி வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் மறைவு செய்து அமிதாப் பச்சனின் உள்ளுணர்வுக்கு தெரிந்திருப்பதாகவும், இதனை நம்பவே முடியவில்லை என்றும் நெட்டிசன்கள் பதில் டுவிட் செய்து வருகின்றனர்.