தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி சினிமாக்களில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.

ஸ்ரீதேவியின் மரணத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சத்தீஸ்கர் மாநில முதல்வர் என தேசிய தலைவர்களும் பல மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஜினி, கமல், விஜயகாந்த், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், பாரதிராஜா என தமிழ் திரையுலகமே ஸ்ரீதேவியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற நடிகைகளின் முன்னோடியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, கோலிவுட், டோலிவுட், பாலிவுட் ஆகிய மூன்று துறைகளிலும் கொடிகட்டி பறந்தார். நடிப்பில் உச்சத்தை தொட்ட நடிகை ஸ்ரீதேவி.

16 வயதினிலே, மூன்றாம் பிறை ஆகிய திரைப்படங்கள் தலைமுறை கடந்தும் ஸ்ரீதேவியின் நடிப்பு திறமையை பறைசாற்றும். 

இதனிடையே ஸ்ரீதேவி மறைவுக்கு சில நிமிடங்கள் முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பகிர்ந்த டுவீட் வைரலாகி வருகிறது. நேற்றிரவு துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதேவி மறைவு செய்தி இந்திய நேரப்படி 3 மணியளவில்தான் ஊடகங்களில் வெளியானது.

ஆனால் நேற்றிரவு 1.15 மணியளவில் நடிகர் அமிதாப் பச்சன் தன் டுவிட்டர் பக்கத்தில், “ஏதோ தவறாக படுகிறது.. வித்தியாசமான உணர்வாகவும் பதற்றமாகவும் உள்ளது.. ஏன் என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார். அமிதாப் பச்சன் இப்படி டுவீட் செய்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவியின் மறைவுசெய்தி வெளியானது.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="hi" dir="ltr">T 2625 - न जाने क्यूँ , एक अजीब सी घबराहट हो रही है  !!</p>&mdash; Amitabh Bachchan (@SrBachchan) <a href="https://twitter.com/SrBachchan/status/967485556115480576?ref_src=twsrc%5Etfw">February 24, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

ஸ்ரீதேவியின் மறைவு என்றில்லாமல், ஆனால் ஏதோ ஒன்று தவறாக நடக்கப்போகிறது என அமிதாப் பச்சனின் உள்ளுணர்வு கூறியிருக்கிறது. அமிதாப் பச்சன் டுவீட் போட்டு சில நிமிடங்களில் ஸ்ரீதேவியின் மறைவு செய்தி வெளியானதால், பச்சனின் டுவீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.