பாஜகவின் துர்கா பூஜை பந்தலை தொடங்கி வைக்கும் அமித் ஷா!

மேற்குவங்க மாநிலத்தில் பாஜகவின் துர்கா பூஜை பந்தலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கவுள்ளார்

Amit Shah to inaugurate Durga Puja pandal in West Bengal today smp

இந்துக்களின் முக்கிய திருவிழாவான துர்கா பூஜை அக்டோபர் மாதத்தில் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை துர்கா தேவி வென்றதன் அடையாளமாக துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாள் திருவிழாவான துர்கா பூஜை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடபட்டாலும் மேற்கு வங்கத்தில் மிகப் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

மேற்குவங்க மாநிலத்தின் முக்கியக் கொண்டாட்டமான துர்கா பூஜா நிகழ்ச்சியை, கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் யுனெஸ்கோ இணைத்துள்ளது. இந்த பூஜையையொட்டி, பிரமாண்டமாக துர்கா பந்தல் அமைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனர். இந்த பந்தல்களில் நாள்தோறும் துர்க்கைக்கு வழிபாடு நடத்தப்படும். பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு துர்கா பந்தலை பார்வையிடுவர்.

அந்த வகையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள பாஜகவின் துர்கா பூஜை பந்தலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கவுள்ளார். பிற்பகல் 3 மணியளவில் கொல்கத்தா செல்லும் அவர், மாலையில் மீண்டும் டெல்லி திரும்புகிறார். கொல்கத்தாவில் சில மணி நேரங்கள் மட்டுமே அவர் இருக்கும் அவர், துர்கா பூஜை பந்தலை தொடங்கி வைக்கவுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கூகுளில் எதை தேடக் கூடாது? உஷார் மக்களே!

“சந்தோஷ் மித்ரா சதுக்கப் பூஜையை மாலை 4 மணியளவில் அமித் ஷா தொடங்கி வைப்பார்.” என பாஜக கவுன்சிலரான பூஜைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டில், சால்ட் லேக்கில் பிஜே பிளாக் சமூக துர்கா பூஜையை அமித் ஷா தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, 2020ஆம் ஆண்டில் இருந்து மேற்குவங்க பாஜக சொந்தமாக தாங்களாகவே துர்கா பூஜையை கொண்டாடத் தொடங்கியது. அம்மாநிலத்தில், துர்கா பூஜையை இதுபோன்று தனியாக கொண்டாடும் ஒரே கட்சி பாஜகதான். தொடர்ந்து, 2021, 2022ஆம் ஆண்டுகளிலும் பாஜக துர்கா பூஜை கொண்டாடியது. ஆனால், 2023ஆம் ஆண்டு முதல் பூஜையை நடத்தப்போவதில்லை என மாநில பாஜக கடந்த ஆண்டு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios