பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அனைத்து தீவிரவாத குழுக்களையும் முற்றிலுமாக அழிக்க வேண்டும் என பாகிஸ்தானை அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.
இது குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர், தீவிரவாதிகளின் வன்முறையால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயங்கரவாத குழுக்களையும் ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிக்க பாகிஸ்தானிற்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால், அதற்கு பாகிஸ்தானும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
பாகிஸ்தான் மண்ணில் புகலிடம் அளிக்கப்பட்டுள்ள பயங்கரவாத குழுக்களை அழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
