சபரிமலை ஐயப்பன் கோயிலுக்‍குள் பெண்களை அனுமதிக்‍கத் தயார் என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில்​தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாரம்பரிய வழக்‍கப்படி, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்‍கப்படுவதில்லை.

இந்நிலையில், பெண்களையும் கோயிலுக்‍குள் செல்ல அனுமதிக்‍க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்‍கறிஞர் அமைப்பு ஒன்று, பொதுநலன் வழக்‍கு தாக்‍கல் செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள் திரு. தீபக்‍ மிஸ்ரா, திரு. சி. நாகப்பன், திருமதி. ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்‍கு வந்தது.

அப்போது, கேரள அரசு சார்பில், தாக்‍கல் செய்யப்பட்ட பதில் மனுவில் சபரிமலை கோயிலுக்‍குள் பெண்களை அனுமதிக்‍கத் தயார் எனத் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்‍கு விசாரணையை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதிக்‍கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.