Asianet News TamilAsianet News Tamil

Heatwave : சுட்டெரிக்கும் வெயில்.. மக்களே கண்டிப்பா இதை எல்லாம் செய்யாதீங்க.. மத்திய அரசு அட்வைஸ்...

வெப்ப அலைக்கு மத்தியில் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Ahead Of Heatwave, Health Ministry Issues Guidelines Rya
Author
First Published Apr 5, 2024, 8:01 AM IST

நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெப்பத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்த சூழலில் ஏப்ரல் - ஜூன் வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் வெப்பத்திலிருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சுகாதார அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட சில நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சகம் மேற்கோள் காட்டி உள்ளது., இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் “ மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, வெப்ப அலைகளால் உருவாகும் வெப்பம் தொடர்பான நோய்களைச் சமாளிப்பதற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்கும், வரவிருக்கும் கோடை காலத்திற்கான செயல் திட்டத்தைப் பற்றி விவாதிப்பதற்கும் இன்று ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடும் வெப்பத்தை சமாளிக்க சுகாதார அமைச்சகம் சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. கோடை காலத்தில் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

கோடை காலத்தில் செய்ய வேண்டியவை என்ன?

நீரேற்றமாக இருக்கவும்

நேரடி சூரிய ஒளியைத் தடுக்கவும்

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்

செய்யக்கூடாதவை என்னென்ன?

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்

சூரிய ஒளியில் வேலை செய்வதை தவிர்க்கவும்

மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சமைப்பதை தவிர்க்கவும்

குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வாகனத்தில் கவனிக்காமல் விடாதீர்கள்

மது, டீ, காபி, சர்க்கரை கலந்த பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்

வெறுங்காலுடன் நடக்காதீர்கள்

தனிமையில் வாழும் முதியவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களின் ஆரோக்கியத்தை தினமும் கண்காணிக்கவும்

உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருங்கள், திரைச்சீலைகள், ஷட்டர்கள் அல்லது சன்ஷேட்கள் மற்றும் இரவில் ஜன்னல்களைத் திறக்கவும்

பகலில் கீழ் தளங்களில் இருக்க முயற்சி செய்யுங்கள்

உடலை குளிர்விக்க மின்விசிறி மற்றும் ஈரமான ஆடைகளை பயன்படுத்தவும்

Follow Us:
Download App:
  • android
  • ios