Agnipath Scheme : மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்த அக்னிபத் திட்டத்தை எதிர்த்து, நாட்டின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அதிகரித்து வரும் பரபரப்பான சூழலால் பீகாரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.  

ஆட்சேபனைக்குரிய கருத்துகளைப் பரப்பி பொதுமக்களை தூண்டிவிட்டு உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் இணையம் பயன்படுத்தப்படுவதாக மாநில அரசு கூறியது. அதிகப்படியான கலவரங்கள் பீகாரில் நடந்து வருகிறது. ஜூன் 17 அன்று 3 ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்து வருகிறது.

ஆயுதப் படைகளுக்கான புதிய ஆள்சேர்ப்புக் கொள்கையான அக்னிபாத் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது, எனவே இத்திட்டம் விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் இன்றி செயல்படுத்தப்பட்டதாக சிலர் விமர்சிப்பது முற்றிலும் தவறானது என்று இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர்.ஹரி குமார் ஏசியாநெட் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார், அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், இது ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள திட்டம் ஆகும். 

கார்கில் கமிட்டி அறிக்கையின் செயல்பாடாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு ஆய்வு செய்யப்பட்டு, ஆராயப்பட்டு, பல ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்த அக்னிபத் திட்டத்திற்கு உருவாக்கம் செய்தோம். இந்தத் திட்டம் சேவைத் தலைமையகம், நிதி அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், கல்வி அமைச்சகம் மற்றும் சேவைகளின் அனைத்து துறை அமைப்புகளுடன், மிகக் குறைந்த மட்டம் வரை, இதன் தாக்கங்களைக் கண்டறிய விவாதிக்கப்பட்டது. 

50 சதவீதமாக இருக்க வேண்டுமா அல்லது 60-40 ஆக இருக்க வேண்டுமா அல்லது 65-35 ஆக இருக்க வேண்டுமா என்று நாங்கள் விவாதித்தோம். இவை அனைத்தும் விவாதிக்கப்பட்டது. இது மிகவும் பரிசீலிக்கப்பட்ட முடிவு. இந்த வடிவத்தில் திட்டமாகும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் வேலையில்லாமல் இருப்பார்கள் என்று இல்லை. இப்போது நீங்கள் ஆயுதப் படையில் இருக்க விரும்புகிறீர்களா என்பதைப் பரிசோதிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறு வயதிலேயே நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறீர்கள். 

உங்களுக்கு வேலை பிடிக்குமா, சர்வீஸில் தொடர வேண்டுமா என்று பார்க்க, 15-20 வருடங்கள் சேர வேண்டுமா, வேண்டாமா என்று இன்று முடிவெடுக்க வேண்டும். எனவே அவர்களுக்கு 15 ஆண்டுகள் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. இப்போது உங்களுக்கு ஒரு விருப்பம் உள்ளது. தொடர விரும்பாதவர்கள் பலர் உள்ளனர். அதனால் அவர்கள் இந்தப் பயிற்சியால் பயனடைவார்கள்.

இந்த பயிற்சியின் தரம் உங்கள் ஆளுமை, உங்கள் நம்பிக்கை, சிரமங்களைக் கையாளும் திறன், பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. வேலை, கடின உழைப்பு ஆகிய இவை அனைத்தும் நான்கு வருடங்களில் உங்களுக்குள் பதிந்துவிடும். நான் அவரை வேலையில்லாதவராக பார்க்கவில்லை’ என்று கூறினார்.

இதையும் படிங்க : AIADMK : வருகிறது இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா அதிமுக ? குழப்பத்தில் தொண்டர்கள்!

இதையும் படிங்க : 2024 தேர்தல்.. தமிழ்நாட்டுல இருந்து 25 எம்பிக்கள்.. இதுதான் டார்கெட்! திமுகவை அட்டாக் செய்யும் அண்ணாமலை