Asianet News TamilAsianet News Tamil

2024 தேர்தல்.. தமிழ்நாட்டுல இருந்து 25 எம்பிக்கள்.. இதுதான் டார்கெட்! திமுகவை அட்டாக் செய்யும் அண்ணாமலை

Annamalai : கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு நல்ல நிலையில் உள்ளது. ஆனால்  திமுகவின் ஓராண்டு கால ஆட்சியிலேயே மக்கள் விரக்தியில் உள்ளனர். 

BJP will capture 25 MP seats in Tamil Nadu in the 2024 parliamentary elections said annamalai
Author
First Published Jun 20, 2022, 2:29 PM IST

பாஜக மாநாடு

கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பொள்ளாச்சியில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு மேடை, தமிழக சட்டப்பேரவை போன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘பொள்ளாச்சியில் கோட்டை போன்று மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஒரு சரித்திர மாநாடாக அமையும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைய இந்த மாநாடு தீப்பொறியாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு நல்ல நிலையில் உள்ளது. 

ஆனால்  திமுகவின் ஓராண்டு கால ஆட்சியிலேயே மக்கள் விரக்தியில் உள்ளனர். பாஜக ஆட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. கழிப்பறைகள் தொடங்கி, வீடுகள், குடிநீர் இணைப்பு என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

BJP will capture 25 MP seats in Tamil Nadu in the 2024 parliamentary elections said annamalai

அண்ணாமலை பேச்சு

பாஜக ஆட்சியில் 12 மருத்துவ கல்லூரிகள் ஒரே நாளில் திறக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தென்னை விவசாயம் சார்ந்த பகுதி. பாஜக ஆட்சியில்தான் கொப்பரை தேங்காய்க்கு ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போதை பா.ஜ.க. ஆட்சியில் இந்தியர்கள் மற்ற நாடுகளுக்கு முதலாளிகளாக செல்லும் நிலை உருவாகி உள்ளது. பாஜக மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறமுடியாது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மந்திரிகளாக இருந்தவர்கள் ஊழல்வாதிகளாக இருந்தனர். 

இதையும் படிங்க : இரட்டை இலையை முடக்கிவிடுவேன்.. இப்படி மிரட்டாதீங்க ஓபிஎஸ்.! ரகசியத்தை உடைத்த அதிமுக பிரமுகர்

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து தினசரி 7 ஆயிரம் லோடு கனிமவளங்கள் கேரளாவிறகு கடத்தப்படுகிறது.  சோதனைச்சாவடிகள் தனியார் சோதனைச் சாவடிகள் ஆக உள்ளன. போலீசாரின் கரங்கள் கட்டப்பட்டு உள்ளது. கனிம வளங்கள் கடத்தலை தடுக்க பாஜக சார்பில் பெரிய அளவிலான போராட்டங்கள் விரைவில் நடத்தப்படும். சிறுமியின் கருமுட்டை விற்பனை, கூட்டுக் கொலைகள் என திமுகவின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது. பெண்களின் பாதுகாப்பு திமுக ஆட்சியில் கேள்விக்குறியாக உள்ளது. 

திமுக ஆட்சி

மு.க ஸ்டாலின் நம்பர் 1 முதல்-அமைச்சர் என தங்களுடைய ஊடகங்களில் சுயவிளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் பொய் சொல்வது போன்றவற்றில் ஸ்டாலின் நம்பர் ஒன் முதல்-அமைச்சராக உள்ளார். பாஜக ஆட்சி மீது வைக்கப்படும் பொதுவான ஒரே ஒரு குற்றச்சாட்டு இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் என்பது தான். ஆனால், மணிப்பூர், கோவா போன்ற இடங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருந்தும் பாஜகவே வெற்றி பெற்று உள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். பாஜகவின் ஆட்சியை பெண்கள் பாதுகாப்பான ஆட்சியாக உணர்கின்றனர்.

BJP will capture 25 MP seats in Tamil Nadu in the 2024 parliamentary elections said annamalai

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் திமுக அரசு பெயர் மாற்றி அவர்களின் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழக அரசு பெயர் மாற்றம் செய்து பல்வேறு திட்டங்களை திமுக அரசின் திட்டங்களாக கூறிவருகிறது. திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு பல்வேறு துரோகங்கள் இழைக்கப்பட்டுள்ளன. காவிரி பிரச்சினை, கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது போன்ற பல்வேறு துரோகங்களை தமிழகத்திற்கு தி.மு.க. செய்துள்ளது. தற்போது பாஜக கண்டிப்பாக கச்சத்தீவை மீட்கும் என்று தெரிந்தவுடன் கச்சத்தீவை மீட்கும் கோரிக்கையை ஸ்டாலின் முன்வைத்து வருகிறார். 

2024 தேர்தல்

இது மக்களை ஏமாற்றும் செயல். ராகுல் காந்தியின் ஊழல் விசாரணையை திசை திருப்பும் நோக்கில் தற்போது சில மாநிலங்களில் மத்திய அரசின் புதிய ராணுவ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த திட்டம் இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்தி எதிர்காலங்களில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள உறுதுணையாக இருக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும்’ என்று பேசினார்.

இதையும் படிங்க : AIADMK : வருகிறது இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா அதிமுக ? குழப்பத்தில் தொண்டர்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios